இளநிலை உதவியாளர் /உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சி இணையவழியில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - kalviseithi

Aug 14, 2021

இளநிலை உதவியாளர் /உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சி இணையவழியில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளிக் கல்வித் துறையில் பள்ளிகள் அலுவலங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் | உதவியாளர்களுக்கான 35 பணிநாள்கள் கொண்ட இணையவழி அடிப்படைப் பயிற்சி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது எனவும் , அப்பயிற்சிக்கு 2017 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிவரன்முறை செய்யப்பட்ட பணியாளர்களின்பெயர்ப் பட்டியலை இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்திசெய்து அனுப்புமாறு பார்வை ( 2 ) ல்காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே , பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் விவரங்கள் பார்வை ( 1 ) ல்காணும் செயல்முறைகளின் படி மாவட்ட வாரியாகப் பெறப்பட்டு , 2017 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிவரன்முறை செய்யப்பட்ட பணியாளர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 


அப்பட்டியலில் உள்ள பணியாளர்களின் // 2 // விவரங்களையும் , 2017 க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள் எவரேனும் விடுபட்டு இருப்பின் அதனையும் சேர்த்து , இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் ஆங்கிலத்தில் , Excel Format ல் தட்டச்சு செய்து , 12082021 மாலை 05.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


DSE - Bhabani Sagar Training Proceedings - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி