பள்ளிகள் திறப்பு - ஓரிரு நாட்களில் முடிவு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2021

பள்ளிகள் திறப்பு - ஓரிரு நாட்களில் முடிவு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

 

செப்டம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு 50% மாணவர்களை மட்டும் பள்ளியில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


மேலும் தனியாரும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த முன்வர வேண்டும் என கூறியிருந்தார். பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் தைரியமாக முன்வர வேண்டும் என தெரிவித்தார். கொரோனா கட்டுக்குள் வந்த பின், தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என கூறினார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. அதோடு பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைப்பதற்கும் இதில் ஆலோசிக்கப்படும் என தகவல் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. பள்ளி திறப்பாங்களா

    எனக்கு டவுட்டா இருக்கு

    ReplyDelete
  2. எனக்கும் தான்

    ReplyDelete
  3. 1) பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக
    2) பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைப்பதற்கும் இதில் ஆலோசிக்கப்படும்
    அண்ணன் 🔥🔥🔥 வந்தாலே
    ஆலோசனை தூள் பறக்கும் 💪💪💪
    போடுறா வெடிய💥💥💥

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி