ஆசிரியப்பயிற்றுநர்களின் சுயவிவரம் சரிபார்க்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2021

ஆசிரியப்பயிற்றுநர்களின் சுயவிவரம் சரிபார்க்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

 


ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணிபுரியும் ஆசிரயர் பயிற்றுர்நகள் சார்ந்த விவரத் தகவல்களை தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்றக் கூடிய ஒவ்வொரு ஆசிரியப் பயிற்றுநர்களின் பெயர் , பாலினம் , பிறந்த தேதி , ஆசிரியத் தேர்வு வாரியத்தின் ஆண்டு , ஆசிரியத் தேர்வு வாரியத்தின் தரம் , பணியில் சேர்ந்த நாள் ( மு.ப / பி.ப ) , பாடம் , தற்பொழுது பணியாற்றும் மாநிலத் திட்ட அலுவலகம் , மாவட்டத் திட்ட அலுவலகம் , வட்டார வள மையம் மற்றும் குறுவள மையம் உட்பட , இது தொடர்பான அனைத்து விவரங்களையும் சரிபார்த்து தங்களுடைய தகவல்கள் அனைத்தும் மிகச் சரியாக உள்ளது என்பதனை உறுதி செய்து ஏதாவது தகவல்கள் விடுப்பட்டு இருந்தால் அதனை EMIS தளத்தில் பதிவு செய்தல் வேண்டும். 


ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆசிரியப் பயிற்றுநர்களின் பதவி உயர்வு நேரடித் தேர்வின் மூலம் பிற துறைகளுக்கு சென்ற விவரம் , பிறப்பு உட்பட மற்ற பிற காரணங்களால் காலி பணியிடம் கரற்பட்டிருக்கக் கூடிய கூடுதல் விவரங்களையும் சரிப்பார்த்து உறுதிப்படுத்துதல் வேண்டும் மேலும் ஆசிரியப் பயிற்றுநர்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தையும் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் , மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் சரிபார்த்து உறுதி செய்து இப்பணியினை 22.03.2021 குள் முடித்திடல் வேண்டும். இதனை மாவட்ட உதவித் திட்ட அலுவலருக்கு கட்டுதல் முதன்மைக் கல்வி சலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும் இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக மாநில திட்ட இயக்கக EMIS பிரிவானது EMIS Profile ) Edit Optinn- ஐ தயார் நிலையில் வைத்திட தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி