அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது நிறைவேற்றப்படும்? - பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தகவல்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 19, 2021

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது நிறைவேற்றப்படும்? - பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தகவல்!


தமிழக அரசின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக உள்ளது என்று, தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


இன்று நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் மீதான பதில் உரையில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில், 


"பல விவகாரங்களில் முடிவெடுக்க முடியவில்லை. தமிழக அரசின் நிதிநிலைமை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற முடியாதுயாதற்கு இந்த நிதி சூழல் தான் காரணம்.


அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். ஆனால், நிதி சூழல் மந்த நிலையில் இருக்கிறது என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது உரையில் தெரிவித்துள்ளார். 


இதில், பழைய ஓய்வூதிய (பென்ஷன்) திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் என்று அமைச்சர் தியாகராஜன் தெரிவித்திருப்பதால், தற்போதைக்கு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.


அதாவது, திமுகவின் தேர்தல் வாக்குறுதியை தற்போது நிறைவேற்ற முடியாது என்று நிதி அமைச்சர் தெரிவித்து உள்ளார். 


இன்னும் புரியின்படி சொல்லவேண்டுமானால், திமுக தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், தற்போதைய நிதி சூழல் காரணமாக அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி இந்த வருடம் இல்லை என்று தெரிவித்த நிலையில், தற்போது பழைய பென்சன் திட்டமும் கொண்டுவர முடியாத சூழ் உள்ளதாக தெரிவித்திருப்பது, தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

45 comments:

 1. Replies
  1. நிதி நிலைமை >>>> இத தான அந்த டெய்லரும் சொன்னான்...

   ஆனால் 1...
   மக்கள் போட்ட ஓட்டுல 60+ admk ஜெயிச்சுது
   அரசு ஊழியர் போட்ட ஓட்டுல dmk 160+ ஜெயிச்சுது....
   முற்பகல் செயின் பிற்பகல் விளையும் 😄😄😄

   Delete
 2. இது என்ன பிரமாதம் இன்னும் எவ்வளவோ இருக்கு

  ReplyDelete
  Replies
  1. இன்னும் பல சிக்ஸர் இருக்குனு சொல்லுங்க....
   பவர் கட் பல்லிளிக்குது....
   DA கட் டிமிக்கி கொடுக்குது...
   நீட் ரத்து கழுத்தறுக்குது...

   Delete
 3. ஓய்வு பெறும் வயதை 65 ஆக ஆக்கினால இன்னும் 5 வருடங்களுக்கு நிதி பிரச்சினை இருக்காது. அடுத்த தேர்தலும் வந்துவிடும்.

  ReplyDelete
  Replies
  1. 27ம் தேதி ஒரு அல்வா இருக்கு....

   Delete
 4. சோணமுதா போச்சா குருவி றிங்குனு சுதுமாய்

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஜி....
   அரசு ஊழியர் படிச்சு வேலைக்கு வந்து யோசிக்காம ஓட்ட போட்டுட்டாங்க..,

   Delete
  2. antha mutta kuttathukku ithu parava illa

   Delete
 5. முடியாதுனா தேர்தல் அறிக்கை மில் ஏன் சொல்ல வேண்டும்

  ReplyDelete
 6. அனைத்து வகையான இலவசங்களை உடனடியாக நிறுத்தினால் அரசின் நிதி நிலைமை சீரடையும்.

  ReplyDelete
  Replies
  1. Appadi makkaluku niruthi lanjam vangum velai seiyamal sampalam vangum arasu uliyargaluku koduka vendiya avasiyam illai ippadiku arasu uliyaral pathikka pattam kudimagan

   Delete
 7. அடுத்த electionக்கு ஓட்டு கேட்டு வா...
  அப்ப தெரியும். 20 சீட்டு கூட கிடைக்காது..

  ReplyDelete
  Replies
  1. ஸ்டாலினை தான் வராரு...
   விடியல் தர போறாரு....
   இதுதான் மக்களோட தீர்ப்பு 😄😄😄

   Delete
 8. கொராணா காலத்தில் வழக்கமான ஊதியம் இல்லாமல் அவதிபடும் மக்களுக்கிடையே தேவையற்ற ஆடம்பர செலவினங்களை அதிகப்படுத்தி ஊதிய உயர்வு கோரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சற்றே யோசியுங்கள்.
  எத்தனையோ தெரு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித்தொழிளாலர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
  நானும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் தான்.
  இக்கட்டான சூழ்நிலையில் நாமும் பொருத்துக்கொள்ள வேண்டும்.
  இது என் தனிப்பட்ட கருத்து. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் பாராட்ட வார்த்தைகள் போதாது அய்யா...

   Delete
  2. Ne romba nallavan pola comment pottiruka, MLA, MP , Minister salary kuraika sollu . Politicians kollai adicha panathai eduthu thara sollu. Govt staffs mattum than kannuku theriyatha, looss ah da ne

   Delete
 9. பின்ன என்ன .........வாக்குறுதி

  ReplyDelete
  Replies
  1. https://dmk.in/manifesto-2021

   போய் படிச்சு பாருங்க....
   பருத்தி மூட்ட குடோன்லேயே இருக்கலாம்னு சொல்விங்க...

   Delete
  2. Dai kumutai trb fans clup. Unnaku comments podurdhu mattum Tha veliya ..vetti

   Delete
  3. Unknown அய்யா/அம்மா பிரிட்டிஷ் ஏர்வேஸ் தலைமை விமானியோ?!

   Delete
 10. உங்க வாக்குறுதியை நம்பி உங்களுக்கு ஓட்டு போட்டவங்களுக்கு எல்லாம் இப்ப பொிய நாமத்தை போடப்போரீங்களா? இதன் விளைவை நீங்க எதிர்கொள் வேண்டிருக்கும் எதிர்காலத்தில் அதற்க்கு தயாராக இருங்கள் இப்போதிருந்து.

  ReplyDelete
  Replies
  1. இவ்ளோ டென்ஷன் வேணாம்...
   நாலரை வருஷம் இதே நிலை தான்...😄😄😄

   Delete
 11. Good decision thalaivar stalin do for poor people poor will make you leader

  ReplyDelete
 12. அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் கொரானா நிவாரணம் 4000 ரூபாய் மற்றும் விலையில்லா உணவு தானியங்கள் தந்தார்கள்.இதற்கான நிதி 9000 கோடி.அதாவது அரசு ஊழியர்கள்,பணக்காரர்கள்,வருமானம வரி செலுத்துவோர் அனைவரும் கொரானா நிவாரணம் பெற்றனர்.இதுகுறித்து நீதிமன்றம் வரை வழக்கு சென்றது.இவர்கள் தவிர்த்து தகுதியுள்ள ஏழைகளுக்கு மட்டும் நிவாரணம் தந்திருநதால் இன்னும் இரண்டு மடங்கு நிவாரணம் மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கயிருக்கலாம்.ஆனால் அரசு அதை செய்யவில்லை,காரணம் மக்கள் கோபப்படுவார்கள் எனபதால்தான்.ஆனால் அகவிலைப்படி நிறுத்தம் என்பது அரசு ஊழியர்களுக்கானது மட்டும்தான்.அரசு ஊழியர்கள் கோபப்படுவதை மக்கள் ரசிக்கமாட்டார்கள்.இதை அரசு நன்றாகவே புரிந்துவைத்துள்ளது.கொரானா பேரிடர்,அரசின் நிதிநிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு அரசு அறிவித்தபடி அடுத்த வருடமே அகவிலைப்படி பெற்றுக்கொள்வோம்.அரசிற்கு சிரமத்தை உருவாக்க வேண்டாம்.மேலும் நகைக்கடன்,விவசாய கடன் போன்றவற்றையாவது தகுதியுள்ளவர்களுக்கு தள்ளுபடி செய்தால் ஏழைகளுக்கு பெரிய உதவியாக இருக்கும்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.அரசு ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும்.ஏனெனில் கொரானா காலத்தில் அதிகம் பாதிப்படைந்தது ஏழைகள்தான்.நன்றி

  ReplyDelete
  Replies
  1. எந்த ஏழைக்கும் நகை மற்றும் விவசாயக் கடன் எளிதில் கிடைப்பதில்லை...
   அப்படியே கிடைத்தாலும் அவர்கள் முறையாக திருப்பி செலுத்திவிடுவர்...
   தள்ளுபடிக்காகவே கடன் வாங்கும் பெருநிலக்கிழார்கள் தேர்தலுக்காக கடன் வாங்கி தள்ளுபடிக்கு பொங்கி எழுகின்றனர்

   Delete
  2. ஏன் ? நீங்க தள்ளுபடிக்காகவே கடன் வாங்கும் பெருநிலக்கிழாரோ ?!

   Delete
 13. Govt staffs ellam panakkarana? . Govt staffs la OA, junior Assistant cader ku mattum DA podalam

  ReplyDelete
 14. எழுதி வச்சுக்கோங்க...
  இதே பதில் தான் 27ந்தேதி டெட் பாஸ் ஆன அறிவாளிங்களுக்கு....
  Dmk ஜெயிச்சா போஸ்டிங்ன்னு சூரியனை அமுக்கி விட்ட அதிமேதாவிங்களுக்கு செங்கோட்டையன் அன்பு தம்பி அல்வா தரப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை...

  ReplyDelete
 15. ‌ ‌‌‌‌‌‌‌‌paditha vayathana asiriyargalukku vellayavathu valangungal

  ReplyDelete
 16. DMK கு ஓட்டு போட்ட ஹிந்துக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இன்னும் நிறைய காத்துருக்கு.. மத்திய அரசை, ஒன்றிய அரசும்பாங்க.. ஹிந்து அறநிலையத்துறை ய,அறநிலையத்துறை னு சொல்வாங்க.. யாரையோ திருப்தி படுத்த தேவை இல்லாதத எல்லாம் செய்வாங்க.. உருப்படியா மக்களுக்காக ஒன்னும் பண்ண மாட்டாங்க..

  ReplyDelete
 17. புதிய மொந்தையில் பழைய மோர்
  கருணாநிதியின் வசனம்தான் நினைவுக்கு வருது

  ReplyDelete
 18. இனி திமுகவுக்கு உஉஊஊஊஊ...

  ReplyDelete
 19. Kannai Nambadhe shooting nalla pogudha adha first parunga innmu 4.1/2 years irruku yena avasara hair

  ReplyDelete
 20. அரசு ஊழியர்களுக்கு மிக பெரிய ஆப்பு

  ReplyDelete
 21. கமென்ட் போட தான் கமென்ட் செக்ஷன் கல்வி செய்தியில் உள்ளது.
  நான் தனி நபர் தாக்குதல் இல்லாமல் வதந்தி பரப்பாமல் கமென்ட் பதிவிடுகிறேன். எனக்கு கமென்ட் போடுவது வேலை அல்ல நான் ஒரு நிறுவன ஊழியர் தான்...
  2013 அரசின் தவறான கொள்கை முடிவால் 99 தாள் 2 மார்க் எடுத்தும் பணிவாய்ப்பை இழந்தவன், என்னைப்போல் 5000+ பேர் உள்ளனர் அவர்களின் ஆதங்கமே எனது கருத்து.

  ReplyDelete
 22. Unknownன்னு பேர் வச்சு இருக்கறவங்க தயவு செய்து profile edit பண்ணி புனைப் பேர் வச்சுகோங்க...
  யாருக்கு பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி