மதுரைக்கு வானிலை கால நிலை பேரழிவு எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2021

மதுரைக்கு வானிலை கால நிலை பேரழிவு எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்.

 

இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 30 ஆண்டு கால வானிலை கால நிலை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது. அதன்படி, மதுரை மாவட்டம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வானிலை எச்சரிக்கை:


இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 30 ஆண்டு கால கட்டத்தின் தமிழ்நாட்டில் மழை மாறுபாடு மற்றும் மாற்றங்களை குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவுகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதுக்குமான அதிக மழை பொழிவு, குறைந்த மழை பொழிவு, அதிகம் மழை பெய்த நாட்கள் போன்ற பல்வேறு கோணங்களின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழகத்திலேயே மழை பொழிவு குறைந்து உள்ள மற்றும் மழை பெய்யும் நாட்கள் குறைந்து உள்ள மாவட்டங்களின் பட்டியலில் மதுரை தான் முதலிடத்தில் உள்ளது.


கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, விழுப்புரம், சிவகங்கை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மழை பொழிவு நாட்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர், மேற்கு தேனி, மத்திய சேலம், சென்னை போன்ற மாவட்டங்களில் ஆண்டு மழை அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு நாகை, கிழக்கு கடலூர், சென்னை, திருவண்ணாமலை, சேலம் போன்ற பகுதிகளில் மழை அளவு அதிகரித்திருக்கிறது. வழக்கமாக அதிக மழை பொழிவு உள்ள 13 மாவட்டங்களில் மழை அளவு குறைந்துள்ளது. ஆண்டு மழை அளவில் மதுரை மாவட்டம் மிகவும் குறைந்த அளவில் தான் உள்ளது. இதனால் மதுரைக்கு வானிலை கால நிலை பேரழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதிர்ச்சியளிக்கும் இந்த அறிக்கையின் விளைவினால் மதுரை எம்.பி. வெங்கடேசன் அவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், கால நிலை மாற்றத்தினால் மதுரை அதிகம் பாதிக்கும் நிலையில் உள்ளதால் உடனடியாக இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மதுரையின் பசுமை போர்வையை 33% ஆக அதிகரிக்க சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும், காடுகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க போர்க்கால அடைப்படையில் செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி