அரசின் புதிய அறிவிப்புகள் : விடியலை எதிர்பார்த்த அரசு ஊழியர் மீது இடியாய் விழுகிறது - தலைமைச்செயலக சங்கம் வேதனை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 25, 2021

அரசின் புதிய அறிவிப்புகள் : விடியலை எதிர்பார்த்த அரசு ஊழியர் மீது இடியாய் விழுகிறது - தலைமைச்செயலக சங்கம் வேதனை

 

தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :


 தலைமைச்செயலக பணியாளர்கள் , அரசு பணியாளர்கள் , ஆசிரியர்கள் வாழ்க்கையில் விடியல் ஏற்படும் என்று காத்திருந்தால் , அரசின் சமீபத்திய அறிவிப்புகள் இடியாய் வந்து விழுகின்றன. 7 - வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத்தொகை , ஈட்டிய விடுப்பு சரண்டர் பணப்பலன் , ஆயிரம் ரூபாய் போனஸ் ஆகியவற்றை  இழந்திருக்கிறோம். பழைய ஓய்வூதியத்திட்டத்திற்காக காத்திருந்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் , காட்சிகள் மாறவில்லை . அகவிலைப்படியும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வழங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். மத்திய அரசு அறிவித்ததும் அதற்கு இணையாக அகவிலைப்படியை அறிவிப்பேன் ; அரசுப்பணியாளர் , ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அவர்களின் அடிப்படை உரிமை என்றெல்லாம் எங்களின் தோள் தட்டி குறைகளைக் களைந்த மறைந்த முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதியை நினைவுகூர்கிறோம். சமூகநீதியையும் , அரசு பணியாளர் , ஆசிரியர்களின் அகவிலைப்படியையும் இணைத்து நிதித்துறை அமைச்சர் பேசியது எங்களின் நெஞ்சில் முள்ளாக தைத்துள்ளது. எனவே அவரது அறிவிப்புகளை உடனே திரும்பப் பெற வேண்டும். கடந்த ஜூலை 1 - ந்தேதியில் இருந்து முன்தேதியிட்டு அகவிலைப்படியை 10 லட்சம் அரசு பணியாளர் மற்றும் ஆசிரியருக்கு அளிக்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

5 comments:

 1. நாங்கள் சொல்வதை சொல்வோம் செய்வதை சொல்வோம் இல்ல
  நாங்கள் சொல்வதை செய்வோம் செய்வதைச் சொல்வோம்
  ஆக தமிழக ஊழியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்

  ReplyDelete
 2. விடியட்டும் பார்க்கலாம். ஊழியர்கள் ஏமாந்து விட்டீர்கள்.

  ReplyDelete
 3. வித்தியாசம் இல்லை தி. மு. க. வுக்கும் அதிமுகவுக்கும். M. L. A. and M. P.மட்டும் வேலை எல்லாம் செய்து விடுவார்கள்

  ReplyDelete
 4. அரசு வேலை கிடைத்ததால் போதும் என்று நினைக்கிறோம். கிடைத்தால் ஊதியம் குறைவாக இருக்கிறது அதிக ஊதியம் வேண்டும் என்று நினைக்கிறோம்..... தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இரண்டு வருடமாக ஊதியமில்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களை பற்றி சிந்தித்து உண்டா ? பெயருக்காக அரசுக்கு கொரோனா நிதி கொடுத்தீர்கள். அண்டை வீட்டில் தேவைகளோடு இருந்தவர்களை பற்றி சிந்தித்து உண்டா? சிந்திப்பீர்... செயல்படுவீர். ..

  ReplyDelete
 5. Plz understand former CM EPS , former minister Jayakumar and current Finance Minister. You are not paying salary for free. They are working, you giving salary. Why you talking too much about Govt staffs. Read it what is mean DA, why giving for govt staffs.Govt staffs are not rich like you. If you stop salary for 6 months, many of them attempt suicide. It's real situation, Don't create , they are rich. If you just think one week, all govt staffs not working. You order to whome? Who maintain Law and Order, Who give treatment? Fault is not from your side. Fault is only by staffs. All govt staffs are not a govt officer, maximum govt staffs are govt servants. Kindly understand diffrediff both. Very good lesson for govt servants.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி