பிடித்தம் செய்த CPS ஓய்வூதியத்தொகை ரூ.60 ஆயிரம் கோடி எங்கே? - kalviseithi

Aug 31, 2021

பிடித்தம் செய்த CPS ஓய்வூதியத்தொகை ரூ.60 ஆயிரம் கோடி எங்கே?

 

ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக அரசு பிடித்தம் செய்த ரூ.60 ஆயிரம் கோடி தொகை எங்கே போனது' என சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.


அவர் கூறியதாவது:தமிழகத்தில் 2003 ஏப்.1முதல் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் அரசுஊழியர் , ஆசிரியர்கள் 8 லட்சம் பேர் உள்ளனர். இவர்களிடம் இருந்து அடிப்படை ஊதியம் , அகவிலைப்படியில் அரசு 10 சதவீதம் பிடித்தம் செய்கிறது. அரசு சார்பிலும் 10 சதவீதம் பங்களிப்பு தொகை செலுத்தப்படுகிறது. இத்தொகை நடப்பு ஆண்டு வரை ரூ.60 ஆயிரம் கோடி அளவில் உள்ளது.


புதிய ஓய்வூதிய திட்டத்தில் (சி.பி.எஸ்.,) இறந்த ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம், ஓய்வுக்கு பின்பு வழங்க வேண்டிய பணிக்கொடை வழங்காமல் பாதிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தில் தமிழக அரசால் பிடித்தம் செய்த தொகை ரூ.60ஆயிரம் கோடி எங்கே உள்ளது என்ற விபரம் யாருக்கும் தெரியவில்லை.இந்த நிதி குறித்து அரசு வெள்ளை அறிக்கையை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்றார்.3 comments:

 1. பத்தாம் வகுப்பு இந்திய வரைபடம் சிகரங்கள் வினாடி வினா
  https://tamilmoozi.blogspot.com/2021/08/india-map-peak-quiz.html?m=1

  ReplyDelete
 2. Mr Finance Minister pls share white paper notice... And also share 90 percent expens in govt revenue for government employees salary and pension

  ReplyDelete
  Replies
  1. இந்த பணத்தை முழுவதும் அதிமுக காரர்கள் பையில் போட்டுக் கொண்டார்கள்... சுடலை அண்ட் கோவின் பதில்

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி