Flash News : 9 முதல் 12 வகுப்புகள், கல்லூரிகள் செப். 1 முதல் நேரடி வகுப்பு நடத்தப்படும் , 1 முதல் 8ஆம் வகுப்பு வரை செப். 15 பிறகு திறக்க ஆலோசனை - தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2021

Flash News : 9 முதல் 12 வகுப்புகள், கல்லூரிகள் செப். 1 முதல் நேரடி வகுப்பு நடத்தப்படும் , 1 முதல் 8ஆம் வகுப்பு வரை செப். 15 பிறகு திறக்க ஆலோசனை - தமிழக அரசு அறிவிப்பு.


கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு :

செப்டம்பர் 1 ந் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.

1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு 15 ந் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்று அறிவிக்கப்படும்.

கூடுதல் விபரம் :

முன்பே அறிவித்தவாறு , இன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன :

* 1.9.2021 முதல் பள்ளிகளில் 9 , 10 , 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் , நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , செயல்படும். 
இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

* மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில் , மழலையர் வகுப்புகள் , 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021 - க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் மேலும் , ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.
அனைத்து கல்லூரிகளும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

 • அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் ( Diploma Courses , Polytechnic Colleges ) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.




11 comments:

  1. Supeeeeeeer.


    ஸ்டாலின் ஐயா வாழ்க.


    வரவேற்கிறேன்


    ஜெயபிரகாஷ் சேலம்

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி ஐயா
    வரவேற்கிறோம்

    ReplyDelete
  3. counselling nadakkuma nadakkatha??

    ReplyDelete
  4. Posting eppothu nadakkum?????
    Konsam viraivaga seyaalpadungal

    ReplyDelete
  5. Pls don't forgot 2013 tnbc group exam
    Posting

    ReplyDelete
  6. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  7. பள்ளிகள் திறப்பு மிகவும் வரவேற்கிறோம்..... ஆனால் இதுவே ADMK ஆட்சியாக இருந்து இருந்தால் இந்த முதல்வர் இந்நேரம் அறிக்கை விட்டு இருப்பார் மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடுகிறது என்று... எல்லாம் அரசியல்....

    ReplyDelete
  8. Replies
    1. Govt discussing only BT posting. They planning only BT to PG promotion only. InfutIn f not direct PG teachers post, like BDO, CEO and thasilThar. Now discussion going on.

      Delete
  9. விரைவில் விரைவில்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி