மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் எவ்வாறு நிர்ணயம் செய்வது? - Illustrations & Formula - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2021

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் எவ்வாறு நிர்ணயம் செய்வது? - Illustrations & Formula

 மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் எவ்வாறு நிர்ணயம் செய்வது? - Illustrations & Formula - வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!


அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைகேற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி / மாதிரி / மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படவேண்டும். இதன் அடிப்படையில் 2021-2022ம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்பான பணிகள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை ( EMIS ) மூலமாக மேற்கொள்ளப்பட இருக்கின்றது . எனவே EMIS இணையதளத்தில் பள்ளிகள் சார்ந்த கீழ்குறிப்பிட்ட விவரங்கணை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.


1 , மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அரசு / அரசு மாதிரிப் பள்ளிகள் / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையினை வகுப்பு வாரியாகவும் ( Class We ) மற்றும் தமிழ் வழி / ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


2. ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் அனுமதிக்கப்பட்ட ( Sandianed Post details ) முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பணியிடங்களின் விவரங்களை பள்ளியின் அளவுகோல் பதிவேட்டின்படி ( Scale Rejsta ) ஒப்பிட்டு சரிபார்த்து பதிவேற்றம் செய்திடல் வேண்டும் . அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு ( Supls Past withait psar ) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டிருந்தால் பள்ளியின் அளவுகோல் பதிவேட்டில் ( Sale Regisa ) சரண்செய்யப்பட்ட பணியிடங்களை நீக்கம் செய்வதுடன் , அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாக கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது.


3. அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பணியிடங்கள் சார்பான முழு விவரங்களையும் ( Tadha Profile ) எவருடைய பெயரும் விடுபடாமல் EMIS இணையதளத்தில் உள்ள கலத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


PG Fixation - CEO Proceedings - Download here


Illustrations & Formula - Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி