தலைமை ஆசிரியர்கள் தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்தில் ஆக. 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2021

தலைமை ஆசிரியர்கள் தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்தில் ஆக. 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

பள்ளிக் கல்வி - NSP இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவு செய்து KYC படிவத்தை பூர்த்தி செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


ஒவ்வொரு ஆண்டும் , NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று , தெரிவுசெய்யப்பட்ட , ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு NMMS கல்வி உதவித்தொகை மத்திய கல்வி அமைச்சகத்தால் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் ( DBT ) வரவு வைக்கப்படுகிறது.


இதற்காக , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( DNO ) மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் ( INO ) தங்களது ஆதார் விவரங்களை NSP இணைய தளத்தில் உள்ளீடு செய்து , KYC ) படிவத்தை தவறாமல் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி , ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்தில் 2021 , ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


ஒரு UDISE பள்ளிக் குறியீட்டிற்கு ஒரு தலைமை ஆசிரியரின் ஆதார் விவரங்கள் மட்டுமே NSP இணையதளத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே , இப்பணியை அனைத்து தலைமை ஆசிரியர்களும் மிகுந்த கவனத்துடன் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DSE - KYC Updation Instructions .pdf - Download here...


1 comment:

  1. ஆசிரியர்கள் ஒய்வுபெறும் வயதை 60லிருந்து 58 ஆக குறைத்து இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் அரசு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி