ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் - விரைவில் TET தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2021

ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் - விரைவில் TET தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணி!

 

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளை பள்ளி கல்வி துறை மேற்கொண்டு வருகிறது.

ஆசிரியர்கள் நியமனம் :

தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியதை அடுத்து கடந்த ஜூன் 14ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளமையால் முதற்கட்டமாக 9 முதல் 12 ம் வகுப்பு வரைந்த பள்ளிகள் திறப்பு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகை கட்டாயமாக்கப்பட்டு பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் ஆகஸ்ட் 1 ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை மாணவர்கள் விகித அடிப்படையில் கணகெடுத்து அதை எம்மிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் பொன்னையா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். கடந்த ஆண்டுகளில் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.


அதன் படி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. மேலும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளை பள்ளி கல்வி துறை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் கணக்கெடுப்பு பணியும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

21 comments:

  1. முன்பு இருந்த கல்வி அமைச்சர் இப்படித்தான் ஐந்து வருடம் உருட்டிக் கொண்டே இருந்தார் தற்பொழுது உள்ள அமைச்சரும் இவ்வாறு உருட்ட ஆரம்பிக்கிறார் இப்படியே உருட்டிக் கொண்டே இருந்தால் ஐந்து வருடம் முடிந்து விடும்

    ReplyDelete
  2. எத்தனை வருடம் கணக்கு எடுப்பீர்கள்.

    ReplyDelete
  3. திரும்பவும் முதல்ல இருந்தா start பன்றாங்க. ஆசிரியர் காலி பணி இடங்களை கணக்கேடுக்கும் பள்ளிக்கல்வி துறை தீவிரம்.

    2. O

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க

      Delete
  4. Kalvisethi summa neengale news i create panni TET pass panna candidates manasula oru ethir paarpai undu pannaathinga.... Already naaanga romba nonthu poi irukom... Ventha pun la vel paachaathinga...

    ReplyDelete
  5. இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லையா?????

    ReplyDelete
  6. Anniki kaalaila 6 mani irukum. Kozhi kokkarakko nu kovichi...

    ReplyDelete
  7. எல்லாரும் கணக்கு எடுத்து பல பேருக்கு வயசு முடிந்திரும் நமக்கு வேலை கிடைக்காது கட்டிட வேலைக்கு போறேன்

    ReplyDelete
  8. இது போல பல அப்பொய்ன்மெண்ட் பாத்தாச்சு...😄😄😄😄
    போவியா 😄😄😄

    ReplyDelete
  9. நம்பிக்கை அதானே எல்லாம் காத்திருங்கள் நல்ல காலம் ஒரு நாள் பிறக்கும் 2013 Tet passed cv finished.......

    ReplyDelete
  10. நீங்க சும்மா குடுத்துட்டாலும்... நாங்க அப்படியே அலுத்துதான் போயிருவோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி