ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்றோர் மட்டுமே தமிழ்வழி இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள் - TNPSC தெளிவான அறிக்கை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 1, 2021

ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்றோர் மட்டுமே தமிழ்வழி இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள் - TNPSC தெளிவான அறிக்கை வெளியீடு.

 

ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்றோர் மட்டுமே தமிழ்வழி இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெளிவான அறிக்கை வெளியீடு.


தேர்வாணையத்தால் கடந்த 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 ( தொகுதி - 1 ) ல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள் தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் 05.08.2021 அன்று வெளியிடப்படவுள்ள உரிய படிவத்தில் , 16.08.2021 முதல் 16.09.2021 வரை ( வேலை நாட்களில் ) ஸ்கேன் ( Scan ) செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ - சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் : 


1. பள்ளி முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை 

2. மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயப் படிப்பு 

3. பட்டப் படிப்பு இது குறித்த தகவல் உரிய விண்ணப்பதாரர்களுக்கு அதாவது விண்ணப்பத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றதாக குறிப்பிட்டு முதனிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.


இதைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இது குறித்த குறிப்பாணையினை 05.08.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

4 comments:

  1. எங்களிடம் ஒன்றாவது படித்ததிலிருந்து தமிழ் வழியில் படித்ததற்கு சான்றிதழ் உள்ளது சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. 👉 படித்து கொண்டு இருப்பவர்களுக்கு தான் "முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்" கொடுக்க முடியும்.
    👉 படித்து முடித்தவர்களுக்கு "முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்" கொடுக்க முடியாது அதற்கு அரசு ஆணை வேண்டும் என VAO சொல்கின்றார்.
    👉👉 அரசு ஆணை வெளியீடுங்க முதல்வர் ஐயா 🙏🙏🙏

    ReplyDelete
  3. நேரடியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பொழுது தமிழ்வழி சான்றிதழ் எவ்வாறு ஒன்றாம் வகுப்பிலிருந்து பெறமுடியும்.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி