பள்ளி திறப்பு (01.09.2021)க்குப் பின்னர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2021

பள்ளி திறப்பு (01.09.2021)க்குப் பின்னர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளி திறப்பு (01.09.2021)க்குப் பின்னர் கொரோனா பெருந்தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!



 9 , 10 , 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகளுக்கு மட்டும் அனைத்து வகைப்பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவ , மாணவியர் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பின் , அது குறித்த விவரங்களை அரசிற்கு அனுப்பும் வகையில் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்து இணை இயக்குநரின் ( தொழிற்கல்வி ) மின்னஞ்சல் முகவரி மற்றும் Google Sheet- ற்கு ஒவ்வொரு நாளும் பிற்பகல் 1 மணிக்குள் தொடர்ந்து அனுப்புதல் வேண்டும் என அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது . மேலும் 01.09.2021 முதல் 06.09.2021 முடிய உள்ள காலத்திற்கான விவரங்கள் இன்றே அனுப்பப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி