தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 2021-22 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு - kalviseithi

Sep 10, 2021

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 2021-22 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு

 

2021-22 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளின் ( BVSc & AH - கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் BTech - உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / கோழியினத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு / பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு ) சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து 09.09.2021 காலை 10.00 மணி முதல் 08.10.2021 மாலை 06.00 மணி வரை இணையவழி மூலமாக விண்ணப்பங்கள் ( Online applications ) வரவேற்கப்படுகின்றன.


இணையவழி விண்ணப்பம் , தகவல் தொகுப்பேடு , சேர்க்கைத் தகுதிகள் , தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில் காணலாம்.


 இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் மேலும் , அயல்நாடு வாழ் இந்தியர் ( NRIs ) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் ( Wards of NRIs ) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் ( NRI Sponsored ) மற்றும் அயல்நாட்டினர் ( Foreign National ) இட ஒதுக்கீடு , இணையவழி விண்ணப்பப் படிவங்கள் , வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இப்பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.


இடம் : சென்னை - 600 051 

நாள் : 09.09.2021 தலைவர் செ.ம.தொ.இ / 815 / வரைகலை / 2021 சேர்க்கைக் குழு ( இளநிலை பட்டப் படிப்பு )No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி