தமிழ்வழியில் படித்து குரூப் 1 தேர்வெழுதியோருக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு. - kalviseithi

Sep 23, 2021

தமிழ்வழியில் படித்து குரூப் 1 தேர்வெழுதியோருக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு.

 

தமிழ் வழியில் படித்து குரூப் 1 தேர்வெழுதியோருக்கு, சான்றிதழ் பதிவேற்றம் குறித்து டிஎன்பிஎஸ்சி  முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்துத் தேர்வுக்‌ கட்‌டுப்பாட்‌டு அலுவலர்‌ கிரண்‌ குராலா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


’’தேர்வாணையத்தால்‌ கடந்த 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு-1 (குரூப்- 1) -ல்‌ அடங்கிய

பணிகளுக்கான முதல்நிலைத்‌ தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள்‌, தமிழ்‌ வழியில்‌ பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில்‌ கோரி, தமிழ்‌ வழியில்‌ முதல்‌ வகுப்பு முதல்‌ பட்டப்படிப்பு வரை கல்வி பயின்றதற்கான சான்றுகளை 16.08.2021 முதல்‌ 16.09.2021 வரை இணையவழியில் பதிவேற்றம்‌ செய்த விண்ணப்பதாரர்கள்‌, தமிழ்‌ வழியில்‌ கல்வி பயின்ற சான்றிதழ்களைச் சரிபார்ப்பதற்கு, உரிய சான்றிதழ்களோடு குறிப்பாணையில்‌ குறிப்பிட்டுள்ள தேதி/ நேரத்தில்‌ தேர்வாணைய அலுவலகத்திற்கு வருகைபுரியும்‌ படி அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

1. பள்ளி முதல்‌ வகுப்பிலிருந்து பத்தாம்‌ வகுப்பு வரை

2. மேல்நிலை முதலாம்‌ மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு அல்லது பட்டயப்‌ படிப்பு

3. பட்டப்‌ படிப்பு

இதுகுறித்த தகவல்‌ உரிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்‌ குறுஞ்செய்தி மற்றும்‌ மின்னஞ்சல்‌ வாயிலாகத் தெரிவிக்கப்படும்‌. இதைத்‌ தவிர தேர்வாணைய இணையதளம்‌ மூலமாகவும்‌ இது குறித்த குறிப்பாணையினை பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌’’.

இவ்வாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்‌ தேர்வாணையம்‌ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி