12,000 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2021

12,000 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!

 12,000 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் கல்வி அமைச்சரிடம் மனு


சென்னை கல்வித்துறை அலுவலகத்தில் நடைப்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்கள் சங்கங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகளோடு நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து அவர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்று தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.இலா.தியோடர் ராபின்சன் தலைமையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

தமிழக பள்ளி கல்வி துறையில் 23 ஆண்டுகளுக்கு மேலாக  பணியாற்றி வரும் 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுமார் 1.5 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்கள் படிக்கும் நிலையில் அவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுப்பதற்கு வெறும் 1761 சிறப்பு பயிற்றுநர்கள் மட்டுமே தொகுப்பு ஊதியத்தை பெற்றுக் கொண்டு பணியாற்றி வருகின்றனர்.

சராசரியாக 30 மாணவர்களுக்கு ஒரு அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்ற வேளையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் மிகக்குறைந்த அளவில் பணி செய்து வருகின்றனர்.

இவ்வாறு இக்கட்டான சூழ்நிலை இருந்தபோதும் மனந்தளராது தினமும் பயணம் செய்து 40 பள்ளிகளை பார்வையிட்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி ,பல்வேறு பயிற்சிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று தங்களை அர்ப்பணித்து கொண்டு பணியாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்களை உடனடியாக காலமுறை ஊதியத்தில் இடைநிலை ஆசிரியர்களாக அரசு ஈர்த்து கொள்ள வேண்டும் என்று கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.இலா.தியோடர் இராபின்சன் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து ஆசிரியர் திரு.சு.அருண் குமார் குறிப்பிடுகையில் சிறப்பு பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் பணிநிரந்தரம் செய்வதால் அரசிற்கு மிகக்குறைந்த நிதி செலவே ஏற்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் பகுதி நேர சிறந்த ஆசிரியர்களையும் உடனடியாக பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பகுதி நேர சிறப்பாசிரியர்களை முதலில் முழு நேர ஆசிரியர்களாக நியமனம் செய்து அவர்களுக்கு மே மாத ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

பத்தாண்டுகளாக ஆசிரியர் சங்கங்களை சந்திக்காமல் புறக்கணித்து வந்த முந்தைய அரசின் செயல்பாடுகளை வன்மையாக கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியதை நினைவுகூர்ந்து

தற்போது தமிழக முதல்வரின் நல்லாட்சியில் ஏறத்தாழ 10 மணி நேரம் ஆசிரியர் சங்கங்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிவிர்த்தி செய்வதாக குறிப்பிட்டிருக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சியின் போது மாநில துணைத்தலைவர் டெஸ்மா சிவக்குமார் , பொருளாளர் அம்பை கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் அமைப்பின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் J.அருண் குமார் தங்களது பணிநிரந்தரம் கோரிக்கையை தமிழக அரசிடம் பகிர்ந்து கொண்டமைக்கு தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நிர்வாகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.


11 comments:



  1. 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள்...சார்பிலும் நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  2. பகுதி நேர ஆசிரியர்கள் சார்பாக நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா தயவு செய்து 12,000 பகுதிநேர ஆசிரியர் "பணிநிரந்தரம்" என்ற குத்து விளக்கேற்றி அருள் புரிங்க.😥😥😥😔😔😔😷😷🙏🙏

      Delete
  3. Ayya age 36 ku vandha job ku..ippa 46 age aiduchu. Eludhina exam la pass Panna mudiyula reason panisumai family ellamay..ini exam eludha mudiyadhu...idha vita life la munera Vali I'lla election vakuruthiyula sonna Mathiri engaluku karunai basic la job poatu kodunga ennikum viswasama Nadi udan naga irrupom ungalodu

    ReplyDelete
  4. PLEASE HORORABLE CHIEF MINISTER THALAPATHY AVARGALE AGE RELAXATION FOR PG WITH BED FOR ALL CANDIDATES UP TO 59

    ReplyDelete
  5. Part time teacher ku nalladhu pannuga ini varum Kalam porkalama vidyal varum kastapatu kastapatu ulikurikarom enga valvil deepam eatruga

    ReplyDelete
  6. ஐயா புரிகிறது 10 ஆண்டுகள் அவர்களின் ஆட்சியில் ஒன்றும் இல்லை என்று நிதி நெருக்கடியும் புரிகிறது.ஆனாலும் குடும்பத்தில் ஒரு பெண் தாம் விரும்பிய பாடம் படித்து இறைவன் அருளால் வேலை என்றைக்கு ஒரு நாள் "பணி நிரந்திரம் " ஆகும்.குடும்ப வாழ்க்கையும் சரி இல்லாமல்,பிறந்தவீட்டிலும் இருக்க முடியாமல்.அவள் (personal) வாழ்க்கையை சீர் செய்துக்கொள்ள தினம்,தினம் போராட்டம்.இந்த "கொரோனா" காலங்களில் இன்னும் இன்னல்.எனவே முதல்வர் ஐயா நீங்கள் தேர்தல் வாக்குறியில் கூறியதுப்போல் 12,000 பகுதிநேர ஆசிரியர் வாழ்வில்"பணிநிரந்தரம்"என்ற ஒளி அது சாதாரண அல்ல மிக பிரகாசமான குத்து விளக்கேற்றி காப்பாற்றுங்கள்😥😥😥😔😔😔😷😷🙏🙏

    ReplyDelete
  7. Part time teacher and others ku oru exam vaiunga adhula part time teacher ku 30% preference kodunga...idhu sariya irrukum...

    ReplyDelete
  8. Ippudi solladhinga plz age 46 eppudi solunga

    ReplyDelete
  9. தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி சிறப்புத்திட்டத்தில் 10 வருடங்களாக கணிணி வேலை பாா்த்து வேலையில்லாமல் இருக்கின்றோம்.எங்களுக்கு மாற்று பணி வழங்க தமிழக அரசு எங்களது வாழ்வாதாரம் கருதி வேலை தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

    ReplyDelete
  10. Part time trs nirantharam. Ivanga pannave mattanga friends sry but ithuthan unmai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி