அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக Covid - 19 SWAB TEST மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2021

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக Covid - 19 SWAB TEST மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கு வருகை தரும்  மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக  Covid - 19 SWAB TEST  மேற்கொள்ளுதல் சார்ந்து  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்!




 அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன் தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் அனைவரும் 15 தினங்களுக்கு ஒரு முறை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் COVID -19 SWAB TEST மேற்கொள்வதை முறையாக உரிய நடவடிக்கை மூலம் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் , பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களையும் சுழற்சி முறையில் COVID -19 SWAB TEST மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைத்துப்பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 

மேற்காண் பணியினை அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களும் தவறாமல் கண்காணித்து ஒவ்வொரு 15 தினங்களுக்கும் தவறாமல் முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இப்பணிக்கு என ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளை கண்காணித்து இப்பொருள் சார்ந்து அறிக்கையினை அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி