மாநில பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் 165 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2021

மாநில பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் 165 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்.

 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்து முடிந்தது. கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டு நடந்த தேர்வை 3,862 மையங்களில் 16.14 லட்சம் பேர் எழுதினர். தமிழ், மலையாளம், பஞ்சாபி மொழிகள் முதன் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடந்தது.


தமிழ்நாட்டில் 70 ஆயிரம் மாணவிகள், 40 ஆயிரம் மாணவர்கள் என மொத்தம் 1.10 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் இளநிலை நீட் தேர்வு நேற்று பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கிய நிலையில் தேர்வு மாலை 05.00 மணிக்கு முடிந்தது. அதேபோல் புதுச்சேரியில் 14 மையங்களில் நீட் தேர்வை 7,123 மாணவ, மாணவிகள் எழுதினர்.


இந்நிலையில், நேற்று நடந்த நீட் நுழைவுத் தேர்வில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் இருந்து 200க்கு 165 கேள்விகள் இடம் பெற்றிருப்பதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் இயற்பியல் பாடத்தில் பி பிரிவு கேள்விகள் கடினமாக இருந்ததாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.


மற்ற பகுதிகள் எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்திருந்த நிலையில், மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கின்றன என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

அதன்படி, இயற்பியல் பாடத்தில் 50க்கு 48 கேள்விகளும், வேதியியல் பாடத்தில் 50க்கு 38 கேள்விகளும் இடம் பெற்றிருந்ததாகவும், தாவரவியல் பாடத்தில் 50க்கு 34 கேள்விகளும், விலங்கியல் பாடத்தில் 50க்கு 45 கேள்விகளும் என ஒட்டு மொத்தமாக 200க்கு, 165 கேள்விகள் மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்றிருப்பதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1 comment:

  1. NEET UG 2022
    Repeater course

    TAMIL & English Medium
    Direct & Online Classes

    Hostel attached class rooms

    You tube Channel: magic plus coaching centre, Erode
    For admission Contact:
    9976986679, 6380727953

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி