போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்கள் பணி நீக்கம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 30, 2021

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 ஆசிரியர்கள் பணி நீக்கம்

 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பனையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி வரலாறு ஆசிரியராக பணியாற்றியவர் வசந்தகுமார்(வயது 35). இதேபோல் வாண்டையார் இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் சவுந்தர்ராஜன்.


இவர்கள் இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து இருவரின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிய, சென்னையில் உள்ள கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.


அங்கு ஆய்வு செய்யப்பட்டதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வசந்தகுமார், சவுந்தர்ராஜன் ஆகிய இருவரும் போலி சான்றிதழ்களை கொடுத்து கடந்த 2015-ம் ஆண்டு பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார் உரிய விசாரணை நடத்தி 2 ஆசிரியர்களையும் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கி நேற்று உத்தரவிட்டார்.


தொடர்ந்து இரு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி போலீசில் புகார் அளிக்கவும், தொடர்ந்து அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி பெற்ற சம்பளத்தை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 comments:

 1. புத்திசாலிகள் இருவருக்கும் வாழ்த்துகள்...
  முறையா பாத்தா
  சான்றிதழ்சரிபார்ப்பு நடத்தியவர்களையும் பணிநீக்கம் செய்து ஊதியத்தை திரும்பப்பெற வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. இதான் உண்மை

   Delete
  2. எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து தேர்வுக்கு படிக்கின்றனர் நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது

   Delete
 2. ஆறு வருஷமா...இது மாதிரி எவ்வளவு இருக்கோ....

  ReplyDelete
 3. School teacher name theriyavillai anal sthiyama naan sollvathu unnmai vellore dt gudiyattam block fraud panni velikku sernnthu irukkirarkal yeat 2017

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி