தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2021

தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!

 தமிழகத்தில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்வுகளுடன் அக்டோபர் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


ஊரடங்கு நீட்டிப்பு:


தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் அதிகரித்து வந்த நிலையில், மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். பின்னர், பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இறுதியாக செப்டம்பர் 15ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. தற்போது மேலும், கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவதாலும், அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதாலும் தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை முன்னர் இருந்த தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று ( செப்டம்பர் 9) ம் தேதி அறிவித்துள்ளார்.


மேலும், மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல்வரின் அறிவிப்பில், கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், அண்டை மாநிலமான கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா மட்டுமின்றி நிபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும் தடை நீட்டிக்கப்படுகிறது. பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்.


கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளது. திருவிழா, அரசியல் சமூகம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவற்கு அக்டோபர் மாதம் 31 ம் தேதி வரையில் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பள்ளி கல்லூரி வளாகங்களில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி