அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு உயர்வு; ஆசிரியர் தேர்வு அறிவிப்புக்குப் பிறகு அரசாணை வெளியானதால் வாய்ப்பு பறிபோனது! - kalviseithi

Sep 20, 2021

அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு உயர்வு; ஆசிரியர் தேர்வு அறிவிப்புக்குப் பிறகு அரசாணை வெளியானதால் வாய்ப்பு பறிபோனது!

 

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்புக்குப் பிறகு, அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்ட அரசாணை வெளியானதால், அத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர் 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.


அதில், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 40, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 எனவயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு கடந்த அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்டபோதே பி.எட். பட்டதாரிகள் மட்டுமின்றி, அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, "திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆசிரியர் தேர்வுக்கான வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கப்படும்" என்று வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததால், வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்போது, நேரடி நியமனப் பணிகளில் வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பான அரசாணை அன்றே வெளியானது.

அதில், அரசாணை வெளியான நாளுக்குப் பின்னர் வெளியாகும் அறிவிப்புகளுக்கு இது பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டு, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 18-ம் தேதி தொடங்கியது. அதேசமயம், வயது வரம்பு தளர்வு தொடர்பான அரசாணை 13-ம் தேதிவெளியானதால், வயது வரம்பு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளவில்லை.

இதனால், இந்த அரசாணையின் பயன், 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகளுக்கு கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு அரசாணையின் பயன்களை, சுமார் 2 லட்சம் பி.எட். பட்டதாரிகள் நூலிழையில் தவறிவிட்டுப் பரிதவிக்கிறார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அடுத்த தேர்வுக்கு பொருந்தும்

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் (டிஆர்பி) தலைவர் ஜி.லதாகூறும்போது, "முதுகலை ஆசிரியர்தேர்வுக்கான அறிவிப்புக்குப் பிறகே,நேரடி நியமனப் பணிகளுக்கு 2 ஆண்டுகள் வயது வரம்பு உயர்வு தொடர்பான அரசாணை வெளியானது.

எனவே, இந்த அரசாணை தற்போதைய முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு பொருந்தாது. எனினும், ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்து வெளியிடும் தேர்வுகளுக்குப் பொருந்தும். இப்போது விண்ணப்பிக்க இயலாத தேர்வர்கள், அடுத்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியை பெறுவார்கள்" என்றார்.

23 comments:

 1. இதை எவனாவது பைத்தியக்காரன் தன் சுயநினைவு அற்றுத் திரிவான். அவனிடம் போய் லதாவைச் சொல்லச்சொல்லுங்கள்..11.2.2021விடபட்ட Notification க்குப்பின் 26.02.2021இல் அரசாணை போட்ட 10.5%சேர்த்தி திருத்தப்பட்ட Notification 09.08.2021அன்று வெளியிடமுடியும் போது ஏன் வயதுவரம்பு தளர்வைச் சேர்த்து திருத்தப்பட்ட Notification விடக்கூடாது..நயவஞ்ச அதிகாரிகள்...மேலும் அமைச்சர்ஒப்புதல் இல்லாமல் வெளியிடமுடியுமா....

  ReplyDelete
 2. ௮டுத்த தேர்தலில் 234தொகுதுயிலும் நம்ம முடிவை காண்பிக்கலாம்

  ReplyDelete
 3. லதா அம்மாவை குறை சொல்ல வேண்டாம் மேலதிகாரிகள் சொல்வதை அவர் செய்கிறார். மீறி செய்தால் அவருக்கு வேலை இருக்காது

  ReplyDelete
  Replies
  1. அம்மா என்ற சொல்லை அசிங்க படுத்த வேண்டாம்

   Delete
  2. அன்பு சார் மன்னிக்கவும் கடந்த 2019 முதுகலை ஆசிரியர் ஆன்லைன் தேர்வை சிறப்பாக நடத்தியதால் தான் லதாஐஏஎஸ் அவர்களை இந்த ஆட்சியிலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் மேலதிகாரிகள் சொல்வதை அவர் செய்கிறார் வயது வரம்பு கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஏன் என்றால் மீண்டும் தேர்வு அறிவிப்பு வருமா என்பது சந்தேகமாக உள்ளது காரணம் நிதிப்பற்றாக்குறை முதல்வர் தனிப்பிரிவில் வயது வரம்பு தொடர்பாக மனு அளிக்கலாம் பொது 42 இடஒதுக்கீடு பிரிவினர்47 வயது வரை தேர்வு எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைக்க போராடுவோம்

   Delete
  3. Sir 2019 ஆண்டு நடந்த தேர்வு முடிவும் அதனால் ஏற்பட்ட வழக்குகள் சொல்லும் அவர்கள் நடத்திய தேர்வு லட்சணத்தை சொல்லும்

   Delete
 4. இந்த aatcchiuuallarku நல்ல saavae வராது

  ReplyDelete
 5. Please இந்த வருடமே 2 years உச்ச வரம்பு வயதிற்கு வாய்ப்பு தாருங்கள். அடுத்த TRB exam வருவதற்குள் age bar ஆகிவிடும் எங்களது PG B.Ed., படிப்பு invalid ஆகி விடும் please இந்த வருடம் chance தாருங்கள் please 🙏

  ReplyDelete
 6. குடிகார அமைச்சர்கள், நாக்கு உளறுது, tet, trt வைத்து mla, mp, அமைச்சர்களை தேர்ந்து எடுக்க வேண்டும்,

  ReplyDelete
 7. அரசியல் என்பது ஒரு நாடகமேடை. அவர்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி குடிகாரன் கொடுத்த வாக்குறுதி போல.

  ReplyDelete
 8. இது சமூகநீதிக்கு எதிரானது. லட்சக்கணக்கான பட்டதாரிகளின் வாழ்வுக்கு எதிரான வயதுவரம்பை நீக்குங்கள் அடுத்த தேர்வு நீங்கள் எப்போது வைக்க நாங்கள் எப்போது எழுத?

  ReplyDelete
 9. இது சமூகநீதிக்கு எதிரானது. லட்சக்கணக்கான பட்டதாரிகளின் வாழ்வுக்கு எதிரான வயதுவரம்பை நீக்குங்கள்.

  ReplyDelete
 10. விடியல் ஆட்சி யில் எப்போது விடிய போகிறது.கடவுளே நாங்கள் என்ன பாவ ம் செய்தோ ம்

  ReplyDelete
 11. கல்விக்கு வயது வரம்பு வைத்த அரசாங்கம் அரசியலுக்கு வருவதற்கு வயது வரம்பு,கல்வி தகுதி ஏன்?வைக்ககூடாது.

  ReplyDelete
 12. அதிகாரிகளும் அரசில்வாதிகள்.
  சொன்னதை செய்யாத ஆட்சி.
  அசிங்கம்.

  ReplyDelete
 13. சமூக நீததிக்கு எதிரானது

  ReplyDelete
 14. Tet cv க்கு பிறகு 5% relaxation செல்லும் ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்த அரசாணை செல்லாது இது எந்த வித நியாயம் மாநில(ஆசிரியர்களை பற்றி கவலை கொள்ளாத)அரசே... உமது ஆட்சி எங்கள் மனக்குமுறலை செவிசாய்க்காது... நியாயம் தெரியாத அரசே..

  ReplyDelete
 15. எதற்கு இந்த வயது வரம்பு. B.Ed., படிப்பதற்கு 57 வயது வரை படிக்கலாம்.ஆனால் தேர்வு மட்டும் எழுதக்கூடாது.இதில் என்ன நியாயம்.புதுக்கோட்டையில் ஏன் திமுக அரசு வாக்குறுதி கொடுக்க வேண்டும்.வயது வரம்பு ஆணையை திரும்பப் பெற வேண்டும்.இந்த வயது வரம்பு ஆணைக்கு அரசு மட்டும் அல்ல அதிகாரிகளும் உடந்தை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.இனிமேல் 32 வயதுக்கு மேல் யாரும் B.ed படிக்க்கூடாத என்று ஆணை பிறப்பிக்கலாமே.அதை பண்ணமாட்டார்கள்.ஏனென்றால் எல்லா அரசியல்வாதிகளும் B.Ed.,கல்லூரி நடத்திக் கொண்டிரூக்கிறார்கள்.ஏனென்றாலா அவர்களுக்கு வருமானங்கள் வருகிறது.

  ReplyDelete
 16. Naam anaivarum(45)age candidate
  Poradinal mattumey solutions.
  So arasu kolkaimudivai maatra anthantha blockil porattam pannal mr stalin iyyavukku theriya varum.so anaivarum poraduvom.

  ReplyDelete
 17. இதற்கு முதற் காரணம் மோடி புதிய கல்வி கொள்கை

  ReplyDelete
  Replies
  1. மோடி சுன்னிய ஓம்பலன தூக்கம் வராது

   Delete
 18. Iyya mannikkavum.all states no age limit.but only one our tamildadu.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி