தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ ஜியோ வரவேற்பு! - kalviseithi

Sep 7, 2021

தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ ஜியோ வரவேற்பு!

 

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 20.08.2021 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்ததமாகச் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது தமிழக முதலமைச்சராகப் பதவி பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் , மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது , முடக்கப்பட்டுள்ள அகவிலைப்படியினை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான ஜாக்டோ ஜியோவின் சார்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


இன்றைய தினம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் தொடர்பாக 13 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ ஜியோ நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றைக்குமே அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையேயான நல்லுறவினைப் பேணிப் பாதுகாக்கும் என்பதனை நிரூபிக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் அமைந்துள்ளது. மேலும் , ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுப்பதற்காக 2017 ல் தொடங்கப்பட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பிற்கு , தொடங்கிய நாள் முதலே தனது ஆதரவினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது நல்கி வந்துள்ளார்.


அதோடு மட்டுமல்லாமல் , ஜாக்டோ ஜிபோ போராட்டக் களத்திற்கே வந்து , கழக ஆட்சி அமைந்தவுடன் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியினையும் அளித்து வந்துள்ளார் . 2017 முதல் 2019 வரையிலான போராட்டக் காலம் அனைத்தும் பணிக்காலமாக வரன்முறைப்படுத்தப்படும் , ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பதவி உயர்வு மீண்டும் வழங்கப்படும் , பழிவாங்கலால் செய்யப்பட்ட பணிமாறுதல் இரத்து செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் போராட்ட காலத்தில் அளித்த வாக்குறுதிகளை எள்ளவும் மாற்றாமல் நிறைவேற்றி உள்ளார் என்பதனை நன்றிப் பெருக்கோடு ஜாக்டோ ஜியோ வரவேற்கிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது 110 உரையினை பின்வரும் வரிகளோடு முத்தாய்ப்பாக நிறைவு செய்துள்ளர் . " மக்களாட்சித் தத்துவத்தின் நான்கு தூண்களின் ஒன்றான நிருவாகத்தின் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களது நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக , நிச்சயமாக , உறுதியாக நிறைவேற்றும் ” மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் முத்தாய்ப்பான நிறைவுரை என்பது , ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் பிரதான கோரிக்கையான மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது. 

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 

ஜாக்டோ ஜியோ22 comments:

 1. ஒரு கோடி அப்பு....

  நீ பாத்த?!🤔

  ஆமாப்பு... ஒரு கோடி...

  ReplyDelete
 2. Tq c.m ippa Tha nanga happy a irrukom..

  ReplyDelete
 3. Part time teachers ku support ah irukom nu oorukula kadha vitu thiriyara jactogeo members oru place la yachum yegala pathi pesirukigala dmk vandha yepadiyum permeant seivaganu naga vote potom ana avaga seiyala ana one day kandipa seivaga ivlo naal vai therakama irudhutu aparam vandhu naga kastapatom kural koduthom nu vekkamey illama peruma pesikuviga ipo kuda yegala pathina talk varala ana yegaluku pesamatiga.ungala solli thapila yega association ah soilanum avaga seivaga ivaga seivaganu pinadi poradha vitutu iruka 7 sangatha onnaki oru Sangama poradanum 13000 techer ku 7 sangam vachikitu adichitu irudha nambala oorukava thotukaraga avlodha

  ReplyDelete
  Replies
  1. 10 years summa Tha irrukanga ea tnpsc vao trb evalvu irruku padichu pass aga veandiydhu thana..open a solunga parpom job la serum podhu indha job permanent pannuvaga sonnaga? Indha job ku pf eadhvdhu pdikarangala? Job ku serum podhu enna sonnaga idhu mutrilum niradharam I'lla DHA job nu Tha na sonnaga..(udnay pg trb exam pass pannina job ku ippudi Tha soluvanga nu sollidathinga, avanga vangura salary neega vangura salary onna avnga Mathiri neega padichu pass pannitu job ku ponnigal) edhumay pannama niradharam agum agum nu karpanai pannikitu irrukinga ...unga medhu pavam Tha pada veandum..

   Delete
  2. Hello Mr unknown contract basis na 5 years kula mudikanum sariya adhayum panala exam padichi pass pana soilra nega near by govt school poitu pariga part time teacher vela seiyaragala illaya nu adhulayum computer teacher yevlo per night kuda work pani stress la irukaga ivlo kelvi kekarigala ne 1 to 10 vara yendha school la computer teacher irukaga ana ict lab matum iruku yelam online emis work nu konduvaragaley adhala yar pandraga nu school la padikara pasaga kita keluga pt and drawing nu iruka staff la avaga work illama office assistant ahvey mathitaga yerkanavey kastathula irukom theva illa ma comments potu kasta padutha venam indha kalvi seithi la ict training schedule nu varudhey adha yethana part time teacher conduct panitu irukaga theriyuma list vagi pariga adhula yethana part time teachers incharge nu ivlo velaya panitu nimadhiya thuga kuda mudila idhula exam padichi job ponuma vaila solla yelam kastam illa nerla vandhu paruga apo theriyum ellam...

   Delete
  3. Mr my brother Salem... part time teacher a irrudharu last pg trb cs la pass pannitu ippa government teacher....unga Mathiri pulambi kitu irruthirdha last Vara ippudi Tha...three days job summa kadhai vidathinga....

   Delete
 4. அடேய் வெங்கங்கெட்டவங்களா! இந்தியாவிலேயே அகவிலைப்படி நிறுத்தி வச்சிருக்கும் ஒரே மாநிலம் இது தான். இதுக்கு நீங்க ஜால்ராவா. பேசாம போய் கட்சியில் சேர்ந்துடுங்க..தூ...... மானம் கேட்ட ஜாக்டோ ஜியோ..

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவிலேயே அதிகமா கொள்ளை அடித்து நாட்டை கடன் ஆக்கியதும் தமிழ்நாடு தான் முட்டாள்

   Delete
  2. DA money வச்சு தான் வேளாண்மை க்கு பட்ஜெட் போட்டுருக்காங்க முட்டாள்

   Delete
 5. Jicto geo ஒரு ஜால்ரா குரூப்

  ReplyDelete
 6. மானங்கெட்ட ஜாக்டோ ஜியோ அவங்க தொட்டுக்க ஊறுகாய் கொடுத்திருக்காங்க

  ReplyDelete
 7. நீங்கள் வேண்டும் என்றால் பாருங்களேன், அவங்க பாஷையில் ஒன்றிய அரசுக்கு துணையா 7% அளவிற்கு அகவிலைப்படி கொடுத்து விடியலை தரப் போறாங்க. நீங்கள் வேண்டும் என்றால் பாருங்களேன்...

  ReplyDelete
  Replies
  1. ஓ... துணையா தானா?? இணையா இல்ல....🤔🤔🤔

   அப்ப அது விடியல் தான் 😄😄😄😄

   Delete
  2. Trb fans club Anna oru thelivu veandum part time teacher pathi...avanga job permanent aguma agadha appointment vangum podhu enna sonnaga

   Delete
 8. Hounarable CM , kindly announcement one family one Job, if husband and wife in state or central govt Job, give option to both, select one person continue in job. Bcoz of it many families get govt job. Most of the family husband and wife in govt job. Mostly teachers and revenue people working. Plz

  ReplyDelete
 9. Dear Jacto Jio, we well known you are well wishers of Tamilnadu unemployment youths, so give request letter for one family one job request letter to our CM. We expected soon.

  ReplyDelete
 10. Part time teachers, tet announcement come soon, prepare well, that's only way. Current staffs confirm ,so many cases come. So, govt decide , that decision only.

  ReplyDelete
  Replies
  1. 2013 periya pudingiyaaaa... PlstPos pottal 3 batch um mix panni thaan podanum... Illana stay order thaan...

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி