முதுநிலை ஆசிரியர் தேர்வில் குழப்பம் - விண்ணப்பிக்கும் தேதி மீண்டும் மாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2021

முதுநிலை ஆசிரியர் தேர்வில் குழப்பம் - விண்ணப்பிக்கும் தேதி மீண்டும் மாற்றம்!

 

முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கானவிண்ணப்பப் பதிவு முன்னறிவிப்பின்றி நேற்று தொடங்கியதால், தேர்வர்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் நிலவுகிறது.


அரசு மேல்நிலைப் பள்ளிகளில்காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி, உடற்கல்வி இயக்குநர் (கிரேடு 1), கணினி ஆசிரியர் (கிரேடு 1) பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்.9-ம் தேதி வெளியிட்டது. இதற்கான போட்டித் தேர்வு கணினிவழியில் நவ.13, 14, 15-ம் தேதிகளில் நடத்தப்படும். அதற்கான இணைய விண்ணப்பப்பதிவு செப்.16 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.


எனினும் அறிவித்தபடி செப்.16-ல் விண்ணப்பப்பதிவு தொடங்கவில்லை. இதனால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பப்பதிவு செப்.20-ம் தேதி தொடங்கும் என்று நேற்று முன்தினம் தேர்வு வாரியம் அறிவித்தது. இதையடுத்து தேர்வர்கள் விண்ணப்பிக்க தயாராகி வந்தனர்.


இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (செப்.18) தொடங்கியது. தேர்வர்கள் /trb.tn.nic.in/ என்ற இணையதளம் வழியாக வரும் அக்.17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்‘‘ கூறப்பட்டுள்ளது.


ஒரே நாளில் மீண்டும் விண்ணப்பப்பதிவுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இத்தகைய முரண்பட்ட அறிவிப்புகள் தேர்வர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

12 comments:

  1. பள்ளிக்கல்வித்துறை அனைவரையும் குழப்பும் துறை.

    ReplyDelete
  2. Pls age 40 neekka annaivarum poraduvom vanga

    ReplyDelete
  3. Pls yaravadhu court case podungal age relaxation pg iku

    ReplyDelete
    Replies
    1. யாரவது case போடுங்க என்று சொல்வது என்று கூறுவதை விட நீங்களே case போடலாம்.

      Delete
  4. Pls yaravathu court case podungal pg ku

    ReplyDelete
  5. Pg with bed mudithvarkal annaivaum amithiya irukkirirkal

    ReplyDelete
  6. TRB போர்டு முட்டாள்களின் கூடாரமாகிவிட்டது. கூடாரத்த முதல்ல கலைங்க...!!!

    ReplyDelete
  7. தமிழ் பிரிவைச் சேர்ந்தவர்கள் இளங்கலை பிரிவில் B.lit பதிவு செய்ய முடிகிறதா

    ReplyDelete
  8. ஆசிரியர் போட்டித் தேர்வு எழுத வயதுவரம்பை தளர்த்த வேண்டும் என்று தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும் போது கூறியது. ஆனால் இப்போது கடந்த ஆட்சி செய்ததை தி.மு.க வும் செய்திருக்கின்றது. இதனால் 45 வயதைக் கடந்த பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வாழ்வு கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் முதல்வர் வயதுவரம்பை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  9. இனிமேல் யாரும் ஆசிரியர் பணிக்கு படிக்கக் கூடாது மீறிப் படித்தால் இலவு காத்த கிளி போல் காத்துதான் இருக்கவேண்டும் காரணம் இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் மாற்றம் கிடைக்கும் அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நன்மை நடக்கும் காத்துக் கிடக்க வேண்டும் கட்டைக்குபோகும் வரை முன்பெல்லாம் ஆசிரியர் என்றாலே தெய்வத்திற்கு நிகராக மதிக்கப்பட்டார்கள் இன்று மனிதானாகக் கூட பார்ப்பதில்லை

    ReplyDelete
  10. Give teaching experience marks and employment card wightage marks.

    ReplyDelete
  11. Give teaching experience marks and employment card weightage marks

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி