பெற்றோர்களே குழந்தைகளை கவனிங்க… – பள்ளி கல்வித்துறை திடீர் எச்சாிக்கை! - kalviseithi

Sep 28, 2021

பெற்றோர்களே குழந்தைகளை கவனிங்க… – பள்ளி கல்வித்துறை திடீர் எச்சாிக்கை!

 

கொரோனாவில் பள்ளி மூடலுக்கு பின், கல்வி ஆன்லைன் நோக்கி நகர்ந்தது. மொபைல் இல்லையெனில் கல்வி இல்லை என்ற சூழலும் ஏற்பட்டது. குறிப்பாக, இந்த செல்போனை பயனுள்ளதாக பயன்படுத்தினால், நன்மை பெற முடியும், மனதை அலைபாய வைத்தால், அது நமக்கு கேடு தரும்.


தற்போது பெரும்பாலான பள்ளி மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பெண் குழந்தைகள் தேவையில்லாத பொழுதுபோக்கு செயலிகள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், மத்திய அரசு அனைத்து மாநில கல்வித்துறைக்கு இது சார்ந்த சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.


➤ ஆன்லைன் விளையாட்டுக்களிலிருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.


➤ மாணவர்களின் தேர்ச்சி நிலை மற்றும் பழக்கவழக்கங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.


➤ ஆன்லைன் கல்வியும், ஆன்லைன் விளையாட்டுகளும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும்.


➤ மாணவர்கள் எந்த ஆப்-களை உபயோகிக்கிறார்கள், எந்த ஆப்-ல் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும்.


➤ தனி நபர் தகவல் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது. ஆப்-களை விலைக்கு வாங்க அனுமதிக்கக் கூடாது.


➤ பெற்றோர்களின் டெபிட்/கிரெடிட் கார்டுகள், OTP-ஐ பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.


➤ ஆண்டிவைரஸ், ஸ்பைவேர் மென்பொருள்களை Install செய்துகொள்ள வேண்டும்.


➤ இணையதளத்திலோ, அப்ளிகேஷனிலோ ஏதேனும் விபரீதமாக நிகழ்ந்துவிட்டால் உடனடியாக ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை ரிப்போர்ட் செய்ய வேண்டும்.


➤ மாணவர்கள் Adult App/Website பயன்படுத்துகிறார்களா? என்பதைக் கண்காணித்து அதை தடுத்து உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும்.


➤ மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை தடுத்து, படிப்பில் கவனம் செலுத்த ஏதுவாக பெற்றோர்கள் முயற்சி எடுக்கவேண்டும்.


➤ மாணவர்களின் நடத்தையில் ஏதும் வித்தியாசம் தென்பட்டால் உடனடியாக செல்போன், மடிக்கணினி, கணினிகளை சோதித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


➤ பெற்றோர்கள், ஆசிரியர்களிடத்தில் ஆன்லைன் விளையாட்டுகளின் விபரீதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.


➤ மத்திய பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைப் பின்பற்றி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

8 comments:

 1. காலம் கடந்து கொண்டிருக்கிறது.
  சீர்படுத்த வேண்டியவை எல்வளவோ இருக்கின்றன. இனியும் தாமதித்தால் ஒரு தலைமுறையே ஒழுக்கச் சீர்கேடுகளால் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.

  ReplyDelete
 2. அதற்கு விரைந்து பள்ளிகளை திறந்து கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள செய்யுங்கள்...

  ReplyDelete
 3. Aaaga motham school thirakkama students futhre a naasam seyya mudivu pannitteenga....!

  ReplyDelete
 4. மேலும் 2013 tet pass செய்தவர்களை பணிநியமனம்செய்ய வேண்டும் குறிப்பாக 95+மார்க் எடுத்தவர்களை.

  ReplyDelete
  Replies
  1. Y bro.neenga 95 ah .eligible 82 then y this kola veri

   Delete
  2. 2013 candidates irukara varaikum yaarukume posting kedaikaathuuu....

   Delete
 5. மற்றும்வயது 40 மேல் உள்ளவர்களை மட்டுமே பணிநியமனம் செய்யவேண்டும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி