பேரவையில் பாமக தலைவர்ஜி.கே.மணி பேசும்போது,"தமிழகத்தில் 2006-ம் ஆண்டுக்கு முன் அரசுக் கல்லூரி இல்லை. நான்சட்டப்பேரவையில் கேட்டுக்கொண்டதன் பேரில், முதலில் மேட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அன்று முதல் ஆசிரியரல்லாத பணியாளர்கள், 15 ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், வயது மூப்பு அடைந்துள்ளனர். எனவே, அவர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்" என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் க.பொன்முடி பேசும்போது, "கடந்த 2006-ல் கருணாநிதி ஆட்சியில் உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்ட அக்கல்லூரி 2018-ல் அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டது. அப்போது பல்கலைக்கழக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தற்போதுசம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத் துக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்காலிக பணியாளர்கள் அங்கேயே பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்தஆட்சியில் குழு அமைத்து நியமிக் கப்பட்ட ஆசிரியர், ஆசிரியரல்லா பணியிடங்களில் தவறுகள் நடந்துள்ளதால், தற்போது வெளிப்படைத்தன்மையுடன் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், ஆசிரியரல்லாதவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமும் நியமிக்கப்படுவார்கள்.
மேட்டூர் அரசுக் கல்லூரி மட்டுமின்றி, மற்ற கல்லூரிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த காலத்தில் அதிகம் உள்ளதால், அரசின் நிதி நிலைக்கு ஏற்ப, வெளிப்படையாக பணி வழங்கப்படும்.
தற்போதுள்ளவர்களுக்கு இதுவரை பணியாற்றியதற்கான தகுதிகளும், மதிப்பெண்களும் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
PG TRB 2021
ReplyDeleteALL SUBJECTS Live Online COACHING Classes
& TEST SERIES BATCH
ALL SUBJECTS + EDUCATION + GK ( ENGLISH, MATHS, CHEMISTRY, ZOOLOGY, COMMERCE, HISTORY & Computer Instructor )
Model classes recorded videos YouTube link:
Press link please
https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ
For Admission: 6380727953, 9976986679
Magic Plus Coaching Centre, ERODE-1.
நல்லா கூவு ஒ௫த்தனும் வரமாட்டார் கள்
Deleteசிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்
ReplyDeleteஇன்னும் மூன்று வருடங்கள் கழித்து தான் நியமனம் நடக்கும்.அடுத்த தேர்தலும் வந்துவிடும்.ஏமாற்றம்தான் மிஞ்சும்.
ReplyDeleteஅதிமுக எவ்வளவோ பரவாயில்லை போல தோன்றுகிறது. ஆட்சி அமைந்து 100 நாட்களில் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கப்படும் என சொல்லி படித்த இளைஞர்களின் ஓட்டுகளை வாங்கினார்கள் ஆட்சியில் அமர்ந்தார்கள், ஆட்சி அமைந்த பிறகு நிதிநிலை சரியில்லை என சொல்கிறார்கள், அரசு கல்லூரிக்கு அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்தன, தேர்வு வாரியத்தை தொடர்பு கொண்டால் தகவல் ஏதும் இல்லை என சொல்கின்றனர்.. அதிமுக ஆட்சியில் 7 ஆண்டுகளாக படித்தவர்களுக்கு அவர்கள் ஏதும் செய்யவில்லை என்பதாலேயே இளைஞர்களின் ஓட்டுகள் திமுக பக்கம் விழுந்தது.. அய்யா பொன்முடி அவர்கள் நிதிநிலை சரியில்லை என பேசுகிறார் ஆனால் பள்ளிகளுக்கு 2200+ ஆசிரியர் அறிவிப்பு வருகிறது காரணம் பள்ளி கல்வி அமைச்சரின் வேண்டுதலை முதல்வர் நிறைவேற்றி தருகிறார் ஆனால் கல்லூரியை மட்டும் கிடப்பில் வைக்கின்றனர். இனி வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் MP தேர்தல்களில் இளைஞர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை திமுகவே முடிவு பண்ணட்டும். சிலைகளும், மணிமண்டபங்களினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படுமா என ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்... தமிழ்நாடு மக்கள் மிகவும் பாவம், எந்த ஆட்சி வந்தாலும் விடிவு என்பது இல்லை
ReplyDeleteஇது உண்மை நண்பரே. இனியாவது விடியல் பிறக்குமா???????????????
DeleteMPC PG TRB coaching center for Maths Erode
ReplyDelete# Online Coaching
# Unit wise slip test
# Unit wise test
# 20%, 30% and 50% test
# 7 full test schedule
# Pre recorded class videos
# https://youtu.be/MD3NKkeyJHs
# https://youtu.be/RSLb7MS6IxA
# For details 8668031662