10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2021

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

 

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.


பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அனைத்து பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திட்டமிட்டப்படி வரும் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு அரையாண்டு தேர்வுகள் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றும் நேரடியாக மார்ச் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.

பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் டிசம்பர் மாதத்தில் பொதுவான ஒரு தேர்வு நடத்துவதற்கு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். மாணவர்களின் கற்றல் குறைப்பாட்டை போக்குவதற்காக மக்கள் பள்ளி திட்டம் என்ற திட்டம் வரும் 18ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் பங்கேற்றுள்ள கூட்டம் நடைபெற்று வருகிறது.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி