16.10.2021 சனிக்கிழமை விடுமுறை அளிக்கக்கோரி பள்ளிக்கல்வி ஆணையரிடம் கோரிக்கை! - kalviseithi

Oct 12, 2021

16.10.2021 சனிக்கிழமை விடுமுறை அளிக்கக்கோரி பள்ளிக்கல்வி ஆணையரிடம் கோரிக்கை!

சனிக்கிழமை விடுமுறை அளிக்கக்கோரி மதிப்புமிகு. ஆணையர் அவர்களை சந்தித்து நிறுவனர். Dr.அ.மாயவன் அவர்கள் கோரிக்கை


14.10.2021 வியாழன் , 15.10.2021 வெள்ளி ஆகிய நாட்களுக்கும் ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை , விஜயதசமி என அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்த தொடர் விடுமுறைகளுக்கிடையில் 16.10.2021 சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாக உள்ளது. தொடர் விடுமுறை என்பதால் மாணவர்களுடைய வருகையும் கணிசமான அளவிற்கு குறைந்துவிடும் , மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவார்கள். 


ஆகவே , இடையில் வருகின்ற அந்த ஒரு நாளுக்கும் , அதாவது 16.10.2021 சனிக்கிழமைக்கும் சேர்த்து விடுமுறை வழங்கினால் ஆசிரியர் பெருமக்களுக்கும் , மாணவச் செல்வங்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். 


ஆகவே அருள்கூர்ந்து எங்களின் இந்த நியானமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து 16.10.2021 சனிக்கிழமைக்கும் சேர்த்து விடுமுறை அளிக்க ஆவன செய்யுமாறு கனிவுடன் வேண்டுகிமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 comments:

 1. விடுமுறை வேண்டும் என்றால் ஒரு CL போட்டுக்குங்க.. ஏற்கனவே பொதுமக்கள் நம்மை கண்டாலே ஏளனமாக பேசுகிறார்கள். இதுபோன்ற கோரிக்கைகளை எல்லாம் தயவுசெய்து வைக்காதீர்கள்

  ReplyDelete
 2. Apadiye 18m thedhiyum Sethu kelunga ji😄😄😄

  ReplyDelete
 3. Athana parthen......

  New posting.. Transfer... Promotion.... Children education.... School building .... Ipdi ethavathu pothu nalanuku association la letter anupirunthanganu ninachen

  ReplyDelete
 4. இது மாணவர்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக கேட்கப்பட்ட விடுமுறை......அதானப்பா அதேதான்

  ReplyDelete
 5. Govt SCL Saturday and Sunday leave compolsury Vida veandum manavargal mana alutham kuriyum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி