ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இன்றைய (28.10.2021) முக்கிய அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 29, 2021

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இன்றைய (28.10.2021) முக்கிய அறிவிப்பு.

TRB Press News Today (28.10.2021)

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை 1 ஆகிய ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு வாயிலாக நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் அரசாணை நிலை எண் . 144 , பள்ளிக் கல்வி ( ப.க .2 ( 1 ) துறை , நாள் 18.10.2021 ன்படி , ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. எனவே மேற்காணும் அரசாணையின்படி உச்ச வயது வரம்பினை உயர்த்தியும் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடத்திற்கு பணிநாடுநர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும் போது M.P.Ed. , கல்வித் தகுதி ஒருவருடப் பயிற்சி காலம் முடித்தவர்கள் ( 2002 - ற்கு முன்பு முடித்தவர்கள் மட்டும் ) பதிவேற்றம் செய்வதற்கும் , மேலும் , முதுகலைப் பட்டப்படிப்பு முதல் வருடம் பயின்று பின்னர் B.Ed. , பட்டம் முடித்து அதன்பின்னர் முதுகலைப் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு சேர்ந்து பட்டம் பெற்றவர்கள் பதிவேற்றம் செய்வதற்கு மென்பொருளில் தேவையான மாற்றங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.16 comments:

 1. Not yet rectified.we couldn't apply

  ReplyDelete
 2. இப்படியே காலம் போய்டும் போல...
  முன்னெல்லாம் 90ஸ் கிட்ஸ்க்கு பரீட்சை தான் கஷ்டமா இருக்கும்...
  இப்ப அப்ளை பண்றதே கஷ்டமா இருக்கு..,

  ReplyDelete
 3. *TRB PG 2021*

  Online TEST SERIES BATCH
  தமிழ் & English வழியில் கேள்விகள்.

  *SUBJECTS + EDUCATION + GK* ( PHYSICS, BOTANY, ZOOLOGY, COMMERCE,  &
  COMPUTER INSTRUCTOR Gr.I)

  *For Admission* : 6380727953, 9976986679
  *Magic Plus Coaching Centre,* ERODE-1.

  ReplyDelete
  Replies
  1. நாயே ஏன் இப்படி விளம்பரம் செய்ற... உன் centre best centre na automatic ah admission varum.... Kevalamana centre ah irukkum pola....

   Delete
  2. ஓசில விளம்பரம் பண்றாங்க நண்பர்களே யாமர வேண்டாம் இவர்களுக்கு தகுதி இல்லை ௭ன்றே ௮ர்த்தம்

   Delete
  3. தேர்வு முடிந்தவுடன் வினாக்களுக்கான விடையை முழுமையாக உடனடியாக கோச்சிங் சென்ட்ரால் கொடுக்க முடியவில்லை.அப்புறம் எதற்கு இந்த விளம்பரம்

   Delete
 4. Tet passed candidates ellorum cm cell ku call panni school reopen time la Tet passed candidates ku posting paththi consider panren nu education Minister sonnatha sollunga frds... Nethu naan solliten... Ellorum sonna thaan ethavathu movement irukkum... Illana namakku posting podave maataanunga.... Pls ellarum call pannunga....

  ReplyDelete
 5. சுத்தம்!!! இப்பதான் update பண்றீங்களா? exam கண்டிப்பா 25 நாள் தள்ளிப்போகும்/ஒரு எக்ஸாம் வைக்கவே இவ்வளவு குளறுபடியா?

  ReplyDelete
 6. Replies
  1. Cancel GO 165then to fillBT post because no posting in last 7yrs in govt school (aided school LA last 3yrs no posting because GO 165)

   Delete
 7. நான் apply பண்றது late ஆகிட்டே போகுது, application register பண்ணிட்டேன், ஆனா இந்த tnteu அறிவிச்ச ஒரு அறிவிப்பு எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது, நான் ug, pg,B.ED எல்லாம் tamil major, ஆனா trb இப்போ pstm கேட்குறாங்க, ug, pg, க்கு எல்லாம் வாங்கி upload பண்ணிட்டேன், but B.ED க்கு மட்டும் வாங்க முடியல, pstm certificate வாங்குறதுக்காக நான் சென்னைக்கு போய்ட்டு வரணும், ஏன் இப்படி செய்றாங்கனு தெரியல

  ReplyDelete
 8. Trb க்கு நான் வைக்குற ஒரு வேண்டுகோள் தமிழ் major படித்தவர்களுக்கு pstm தேவை இல்லை என்று அறிவிக்க வேண்டும் 🙏🙏🙏

  ReplyDelete
 9. இப்போது 1 முதல் பிஎட் படிப்பு வரை தமிழ்வழியில் படித்திருந்தால் தான் 20 சதவீத முன்னுரிமை கிடைக்கும் அதனால் சிரமம் பார்க்காமல் சென்னைக்கு போய் வாங்கிவந்து விண்ணப்பிக்கவும் அதிர்ஸ்டம் இருப்பின் நீங்க இந்த முன்னுரிமையில் வரலாம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி