3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வினாடி வினா நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2021

3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வினாடி வினா நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் , பள்ளி மாணவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில் பாடப்பகுதிகளை காணொலிகளாக மாற்றி , தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


மேலும் , மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பொருள் தயாரித்தல் , புத்தாக்க கையேடுகள் தயாரித்தல் போன்ற செயல்பாடுகளையும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு , மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்து வருகிறது . இதனைத் தொடர்ந்து , 3 , 5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி வினா தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது . எனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , இந்த வினாடி வினா தொகுப்பினை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து , அந்தந்தப் பாட ஆசிரியர்களை , மாணவர்களுக்கு whatsapp மூலமாக அனுப்பி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


மேலும் வினாடி வினா குறித்த கலந்துரையாடல் நடத்தி அதன் மூலம் கற்றல் ஐயங்களை தெளிவுபடுத்திட , ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குமாறு அனைத்துப் பள்ளி , தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி