தமிழகத்தில் 320 வன பாதுகாவலர் காலிப்பணியிடங்கள் – காத்திருப்போர் பட்டியல் வெளியீடு! - kalviseithi

Oct 26, 2021

தமிழகத்தில் 320 வன பாதுகாவலர் காலிப்பணியிடங்கள் – காத்திருப்போர் பட்டியல் வெளியீடு!

 

வன பாதுகாவலர் பணிக்கான நேரடி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலை, வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


பட்டியல்:


நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் செல்ல அனுமதியளிக்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது.


கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் அரசு பணிக்கான தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் இருந்தது. தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட தேர்வுகளையும் ரத்து செய்யப்பட்டது. தேர்வு நடைபெற்றால் பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான சூழ உருவாகும் என்பதால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் அலையை தொடர்ந்து 3 ம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தடுப்பூசி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.


இதற்கு முன்பு தமிழகத்தில், 320 வன பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ‘ஆன்லைன்’ தேர்வு 2020 மார்ச்சில் நடந்தது குறிப்பிடத்தக்கது. சொர்ணா காரணத்தினால் அதன் தொடர் நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் திறன் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், தேர்ச்சி பெற்றவர்களில் 313 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேராமல் இருக்கும்பட்சத்தில் அந்த பணியிடங்களை நிரப்ப காத்திருப்போர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்த படியாலானது வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

1 comment:

  1. correction பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு 2020 மார்ச்சில் நடந்தது குறிப்பிடத்தக்கது. #சொர்ணா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி