தமிழகத்தில் 4% பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணி – யுனெஸ்கோ ஆய்வு அறிக்கை! - kalviseithi

Oct 8, 2021

தமிழகத்தில் 4% பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணி – யுனெஸ்கோ ஆய்வு அறிக்கை!

 

யுனெஸ்கோ நிறுவனம் இந்திய பள்ளிகளின் தரம் மற்றும் கல்வி நிலை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, உள்ள விவரங்களை விரிவாக இந்த பதிவில் காண்போம்.


யுனெஸ்கோ ஆய்வு:


யுனெஸ்கோ நிறுவனம் இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. சமாதானத்தை ஏற்படுத்துதல், வறுமையை குறைத்தல், தொடர் முன்னேற்றத்தை மேம்படுத்துதல், கல்வி, அறிவியல், பண்பாடு, செய்தித் தொடர்பு ஆகியவற்றின் வாயிலாக உள் கலாச்சார உரையடல்களை மேம்படுத்துதல் போன்ற நோக்கத்துடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் யுனெஸ்கோ நிறுவனம் இந்திய பள்ளிகளின் தரம் மற்றும் கல்வி நிலை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.


இது கடந்த 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின் தகவலை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. 2021ம் கல்வியாண்டுக்கான தமிழகத்தின் கல்வி அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில் 2018- 2019ம் கல்வியாண்டில் மாவட்ட அளவு புள்ளி விவரங்களின் படி, ஆசிரியரும் இல்லை வகுப்பறையும் இல்லை என்று தெரிகிறது. மேலும், தமிழகத்தில் மொத்தம் உள்ள 59,152 பள்ளிகளில் 2,631 என்ற 4 % பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.


தமிழகத்தில் 94 சதவீத பள்ளிகளில் குடிநீர் வசதி இருப்பதாகவும், 93 சதவீத பள்ளிகள் மாணவர்களுக்கு கழிப்பிட வசதியும் 97 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பிட வசதி உள்ளதாகவும், 61 சதவீத பள்ளிகளில்தான் நூலகம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதி இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. கூடுதலாக 4 சதவீத பள்ளிகள் மட்டுமே இணையதள வசதி உள்ளது, 79 சதவீத பள்ளிகளில் வகுப்பறைகள் நல்ல முறையில் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி