TRB - ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வயது வரம்பை உயர்த்த அரசு பரிசீலனை! - kalviseithi

Oct 8, 2021

TRB - ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வயது வரம்பை உயர்த்த அரசு பரிசீலனை!

 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய வயது வரம்பு உயர்த்துவது குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இது குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பணி நியமனம்:


 தமிழக பள்ளி கல்வித்துறையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆக இருந்தது. ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில் அதற்கு ஓராண்டு முன்வரை நியமனம் செய்யலாம் என்ற அரசாணை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டதால் 59 வயது வரை பணி நியமனம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை அதற்கு எதிர்மறையாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த புதிய வயது வரம்பு தற்போது அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2207 முதுநிலை ஆசிரியர் நியமத்திற்கான தேர்வு அறிவிப்பில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பல தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல ஆண்டுகளாக அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில் தற்போது அதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது.


ஆனால் வயது வரம்பினால் இதற்காக பல ஆண்டுகளாக படித்து பட்டங்கள் பெற்று பயிற்சி பெற்று வந்தவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளதாக பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்களின் நியமன வயது வரம்பை உயர்த்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முதற்கட்ட ஆலோசனை அறிக்கை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இது தொடர்பாக அறிவிப்பு வெளியானால் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

16 comments:

 1. Vinapithavarkaluku etharku inthak arivippu.age relax vendum avarkalul mattume inthak arivippu.

  ReplyDelete
 2. இன்றைய காலைக்கதிர் நாளிதழில் வெளியான ஒரு தகவல் இது உண்மையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர் நடந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  ReplyDelete
 3. தேர்வு தேதியும் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது

  ReplyDelete
 4. மனசாட்சியே இல்லாத ஆசிரியர் தேர்வு வாரியம்,,,,,,,,,2017 ல் சிறப்பாசிரியர்கள் தமிழ் வழியில் பயின்றவர்கள் யாருக்கும் பணி நியமனம் செய்யவில்லை,,,,,அதற்கு பிறகு எழுதிய முதுகலை ஆசிரியர்,,,கணினி பயிற்றுநர்,,,,எல்லோருக்கும் பணி நியமனம் செய்து விட்டார்கள்,,,,,உலகம் உருண்டை,,,,,காலம் பதில் சொல்லும் உங்களுக்கு

  ReplyDelete
  Replies
  1. Sirapu asiriyarkaluku kandipaga pani niyamanam seiya vendum

   Delete
  2. வாய்ப்பு இல்லை

   Delete
 5. PG TRB 2021
  Live Online COACHING Classes
  & Online TEST SERIES BATCH

  SUBJECTS + EDUCATION + GK ( MATHS, PHYSICS, BOTANY, ZOOLOGY, COMMERCE,  &
  COMPUTER INSTRUCTOR Gr.I)

  For Admission: 6380727953, 9976986679
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 6. நிஜமா நம்பமுடியாது

  ReplyDelete
 7. BEO exam results only announced more than one year waiting...when will expect final selection results

  ReplyDelete
 8. வணக்கம் ஐயா
  நான் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் BLit ஜன 2009 முதல் டிசம்பர் 2011 வரை (அதாவது ஜனவரி 2009 _ டிசம்பர் 2009 முதல் ஆண்டு ஜனவரி 2010 - டிசம்பர் 2010 (2 ஆம் ஆண்டு) ஜனவரி 2011 - டிசம்பர் 2011 மூன்றாம் ஆண்டு என) மூன்று ஆண்டுகள் பயின்றுள்ளேன் அது போன்றே எம் ஏ , பி.எட் ஜனவரி - டிசம்பர் கணக்கில் பயின்றுள்ளேன்,
  தற்சமயம் நான் தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது BLit காலவரையறை தேர்வு செய்தால் (சனவரி 2009 - டிசம்பர் 2011) பயின்ற காலங்கள் என்பதில் 2 ஆண்டுகள் என எடுத்துக் கொள்கிறது. ஆதலால் என்னால் விண்ணப்பிக்க முடியவில்லை.
  இந்த தவற்றை TRB சரி செய்ய ஏதாவது வழி உண்டா.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி