ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டு உயர்வு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுத 2 லட்சம் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2021

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டு உயர்வு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுத 2 லட்சம் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

 

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளதால், டிஆர்பி நடத்த உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க சுமார் 2 லட்சம் பி.எட். பட்டதாரிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம்  அறிவித்த, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதல்முறையாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதன்படி பொதுப்பிரிவினருக்கு 40, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.


இதனால் அதிர்ச்சியடைந்த, 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் வயது வரம்பை தளர்த்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டதுடன், முதல்வர், அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்திபள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா நேற்று முன்தினம் இரவு அரசாணை வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆக வும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத் தால் கடந்த செப்.9-ம் தேதி வெளியிட்ட,முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்புக்கு இது பொருந்தும்.

2022-ம் ஆண்டு வரை

இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வரம்பு 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. அதுவரை வெளியிடப்படும் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு இது பொருந்தும்.

மேலும், மனிதவள மேலாண்மைத் துறை கடந்த செப்.13-ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி, நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு 1.1.2023 முதல் பொதுப்பிரிவினருக்கு 42 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளதால், சுமார் 2 லட்சம் பி.எட். பட்டதாரிகளுக்கு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் அக். 31-ம்தேதியாகும். தற்போது வயதுவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், விண்ணப்ப காலஅவகாசம் நீட்டிக்கப்படும். அதேபோல, இணையவழி தேர்வு தேதியும் தள்ளிப்போகும் சூழல் உருவாகும்.

முதல்வருக்கு நன்றி

தங்கள் கோரிக்கையை ஏற்று, வயதுவரம்பை உயர்த்த ஆணையிட்டமைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறையின் முதன்மைச் செயலர் காகர்லா உஷா,பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் ஆகியோருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் மற்றும் 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

18 comments:

  1. 50 வயது என்ன பாவம்
    செய்தார்கள்

    ReplyDelete
  2. அவர்கள் பட்டம் அவ்வளவுதான

    ReplyDelete
  3. Please cancel the ADMK G.O.
    set 57 year

    ReplyDelete
  4. பணி நியமனத்தில் வயது நிர்ணயிக்கும் போது வேலைவாய்ப்பு பதிவு மூப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

    ReplyDelete
  5. In 2lakh people, maximum 2000 may get job
    Others has no chance to write in future.
    That is last chance

    ReplyDelete
  6. பாக்கி உள்ளவர்களுக்கு அரசாங்கத்தால் வேலை கொடுக்கமுடியவில்லையென்றால் 50 வருட வாழ்கைக்கு ஏதாவது வேறு வழி சொல்லுங்க அப்புறம் எதற்கு படிப்புக்கு பல கோடி ஒதுக்கி மக்களுக்கு என்ன பயன் ஏமாற்றம்தான் ஆசிரியர் படிப்பா???

    ReplyDelete
  7. யாரை என்ன சொல்ல, படித்து பட்டம் பெற்று என்ன பயன், வேலை வாய்ப்பு இல்லை. வேலை வாய்ப்பை உருவாக்க தவறுகிறது இந்த அரசு.

    ReplyDelete
  8. PG TRB 2021

    Online TEST SERIES BATCH
    தமிழ் & English வழியில் கேள்விகள்.

    SUBJECTS + EDUCATION + GK ( PHYSICS, BOTANY, ZOOLOGY, COMMERCE,  &
    COMPUTER INSTRUCTOR Gr.I)

    For Admission: 6380727953, 9976986679
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    ReplyDelete
  9. PG TRB 2021*
    Computer Instructor
    Online Coaching Classes

    *Magic Plus  Coaching centre, Erode -1.*
    For Admission:9976986679, 6380727953

    ReplyDelete
  10. வேலையில் இருப்பவர்களுக்கு ஓய்வுபெறும் வயது அறுபதாம்....புதிதாக வேலையில் சேர ஐம்பதை தாண்டினால் தகுதி இல்லையாம்....என்ன நியாயம் ஐயா இது....ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆன பிறகு...பணியில் சேர 59 வயது வரை தகுதி உண்டு...அதுவே நியாயம்....

    ReplyDelete
    Replies
    1. No use for 1 year to 5 years service.Atleast 10 years service required for basic benifits

      Delete
  11. Appadiyae election la nikkarathukkum agelimit podunga

    ReplyDelete
  12. Intha mathiri nilama varathukku karanamae Oru cm tha.avanga mattum app seniority la vacancy fill panniruntha ippo intha nilama 50 s la irukkirabamgalukku vanthirukkathu. Certificate verification mudincha pirgum posting podala.ippo na entha cm pathi solraen nu ellarukkum puriyum

    ReplyDelete
  13. பிரச்ஜைகளுக்கு அரசு இல்லை அரசு குடும்ப உறுப்பினர்களுக்குதான் இரண்டு அரசும்

    ReplyDelete
  14. online application la year ennum extent pannala. 1976 eruthu thaan apply Panna mudiuthu. Online Applicationla 5 varuvam relaxation ennum varala. When will it be extended?

    ReplyDelete
  15. Dai dubukku rajalingam, enga da pona. DMK atchi vamtha udane nera CM veetla pooi pesi udane job vangitharen nu pesinaye. Ippo enga pona.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி