தொடக்க , நடுநிலை ஆங்கில வழி பள்ளிகளில் 50 சதவீதம் தமிழ் வழி வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2021

தொடக்க , நடுநிலை ஆங்கில வழி பள்ளிகளில் 50 சதவீதம் தமிழ் வழி வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

 

தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 50 சதவீதம் தமிழ் வழி வகுப்புகள் கட்டாயம்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து தொடக்க கல்வி இயக்குநரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


இனி வரும் காலங்களில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கேட்கும் பள்ளிகள், அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளனவா என பரிசீலித்த பின்னரே, அனுமதி அளிக்க வேண்டும்.


மேலும், ஆங்கில வழி பிரிவு துவங்க, அனுமதி கேட்கும் பள்ளிகளில் குறைந்தபட்சம், 50 சதவீதம் பிரிவுகள், தமிழ் வழியாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்கும் பள்ளிகளுக்கே அனுமதி வழங்க வேண்டும்.ஒரு பள்ளியில் நான்கு பிரிவுகள் இருந்தால், இரண்டு பிரிவுகள் தமிழ் வழியாகவும், இரண்டு பிரிவுகள் ஆங்கில வழியாகவும் செயல்படலாம்.


மூன்று பிரிவுகள் இருந்தால், இரண்டு தமிழ் வழி பிரிவு இருக்க வேண்டும். ஒரு பிரிவு மட்டும் இருந்தால், அது தமிழ் வழியாகவே செயல்பட வேண்டும். இந்த அறிவுரைப்படி, அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



1 comment:

  1. ஏன்டா எங்க உயிரைவாங்கறீங்க மாணவன் எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பது அவனுடைய மற்றும் அவனின் பெற்றோர் விருப்பம் இதில் நாங்கள் தலையிட முடியுமா? அப்படியே இருந்தாலும் ஏதோ ஒரிரு மாணவர்கள் கேட்பார்கள் அனைவரும் கேட்பார்களா அவர்கள் என்ன எங்களைச் போல உனக்கு அடிமைகளா என்ன

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி