TRB - முறைகேட்டில் ஈடுபட்ட 66 ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை! - kalviseithi

Oct 2, 2021

TRB - முறைகேட்டில் ஈடுபட்ட 66 ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை!முறைகேட்டில் ஈடுபட்ட 66 ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத,  தேர்வு வாரியம் தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த 2017ம் ஆண்டு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதற்காக சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. 


அப்போது, அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணம் கொடுத்து தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக  இருந்த ஜெகன்னாதன் விசாரணை நடத்தினார். அதில், அவர்கள் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 199 பேர் வாழ் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுத முடியாதபடி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.  இதுதொடர்பான விசாரணை மேலும் நீடித்து வந்தது. 


தற்போது, இந்த முறைகேடு தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. அதிலும் 66 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களின் முழுமையான விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களும் வாழ்நாள் முழுவதும் மேற்கண்ட போட்டித் தேர்வுகளை எழுத முடியாத நிலைக்கு தடை விதித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து, மேற்கண்ட விரிவுரையாளர்களுக்கான போட்டித் தேர்வு இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.


Additional List of candidates who have been permanently debarred - Click here...

15 comments:

 1. Police court law all are sleeping now... Vaithu pasiku thappu paninavanaku than intha vengaya sattam

  ReplyDelete
  Replies
  1. *2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள நீங்கள் வெற்றியாளராக வேண்டுமா*...

   கடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...

   உங்களுக்கான தகவல் இது...

   *தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக பலரின் வேண்டுகோளுக்கினங்க...

   *2021 PGTRB -TAMIL விரைவு மீள்ப்பார்வை பயிற்சி தொடங்க உள்ளது*.

   சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் முதுகலை ஆசிரியர்களாக சிறப்பாக மகிழ்வுடன் பணியாற்றிவருகின்றனர்*

   தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.

   *NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
   *7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..

   *NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்*.

   *அரசுகல்லுரி நடத்திய M PHIL நுழைவுத்தேர்விலும் முதன்மையான மதிப்பெண் பெற்று நமது மாணவர்கள் சாதனைகளை தொடர்கின்றனர்*..


   *2021 PGTRB TAMIL முழுப்பாடத்திட்டம் விரைவுப் பயிற்சி அக்டோபர் மத்தியில் தொடங்க உள்ளது*.

   எனவே வெற்றிக்காக *தினமும் குறைந்தது 12 மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளவும்..

   *கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே இக்குழுவில் சேர வாய்ப்பு கிடைக்கும்*

   எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்*..
   கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்*

   **உங்களின் ஆர்வம் மற்றும் தகுதியை அடிப்படையாகக் கொண்டே வாய்ப்பு வழங்கப்படும்*

   *தமிழ்ப்பாடத்திற்கன 11 இயல்களையும் மீள்பார்வை செய்யும் வகையில் மாலை நேரத்தில் நேரலை வகுப்பும் அதனை ஒட்டி தினசரி தேர்வும்* நடைபெறும்.watsapp மூலம் கூடுதல் தகவல்கள் வழங்கப்படும்.

   *இது புதியதாக சேர்ந்து படிக்க விரும்புபவர்களுக்கான பயிற்சியல்ல... ஏற்கனவே வீட்டிலிருந்தே குறைந்தது ஒருமுறையாவது முழுப்பாடத்திட்டத்தையும் படித்து முடித்து வெற்றியை உறுதிசெய்துக்கொள்ள மீள்பயிற்சி எடுத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கானது*

   *உடனடியாக முன்பதிவு செய்துக்கொள்ளவும்*. தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்
   தொடர்புக்கு 8838071570
   *Watsapp ல் உங்கள் பெயர் ஊர்,குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்*.


   இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..

   Delete
  2. இது பணத்துக்காக இல்லை

   Delete
 2. Need 2012 tet exam enquiry to the passed persons with seviere

  ReplyDelete
 3. sir 2006 dted mutithu innum job kitaikaama irukkow plz help

  ReplyDelete
  Replies
  1. unaku pinnadi padichavan elam trb la velai vangitan... poi padichu pass pannu.. Pichai eduka vendam

   Delete
 4. Is that fair judgement? People after crossing 40 no job.With that cruel law for middle age people. But who is involving in malpractice only no job why not put them in prison. What about others who involved in this scandal like mediators and other govt servants.

  ReplyDelete
 5. சரியான தீர்ப்பு.ஆனால் ஒருவர் பணம்‌ கொடுத்து தேர்ச்சி பெற்றார் என்றால் அதன் பின்புலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியமதான காரணம். அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களை தண்டிக்க வேண்டும். மேலும் வயது வரம்பு ஆணைக்கு எதிராக போடப்பட்ட வழக்கு ஏன் தாமதமாகிறது.இதே ஒரு அரசியல்வாதிகளின் கேஸ் சீக்கிரம் முடிந்துவிட்டது.(கலைஞர் அவர்களை நல்லடக்கம் செய்வதற்கு) ஏன் இந்த வேற்றுமை.

  ReplyDelete
 6. அதிகாரிகளை யார் தண்டிப்பர்.

  ReplyDelete
  Replies
  1. ௮திகாாிகளுக்கு நீதிமன்றம் தாமாகவே முன்வந்து தண்டனை வழங்க வேண்டும்

   Delete
  2. எண்கவுண்டர் பண்ண போறாங்களோ 😄😄😄

   Delete
 7. ஊசி இடம் தராமல் நூல் நுழையாது...

  ReplyDelete
 8. leprosy duplicate certificate thanthu Dharmapuri and krishnagiri district la 78 per second grade teacher job vangi irukanaga,all are send complaint letter to CM cell plx.

  ReplyDelete
 9. அடுத்து எங்கே?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி