7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது: தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2021

7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது: தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் உத்தரவு.

 

தமிழகத்தில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது என பொறியியல் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 


பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.


அதன்படி, பொறியியல் கல்லூரிகளில் நடப்பாண்டு 6,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களில் 4,920 மாணவர்கள் தனியார் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளனர். 


ADVERTISEMENT

நடப்பு ஆண்டில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், அதுகுறித்த அரசாணை வெளியிடப்படாததால், தனியார் கல்லூரிகள், மாணவர்களிடம் கட்டணம் செலுத்த வலியுறுத்தின. 


இந்நிலையில், இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ள மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஓர் அரசு பள்ளி மாணவர் பொதுப்பிரிவு, 7.5%சிறப்பு பிரிவு என இரண்டு முறையில் தனியார் கல்வி நிலையத்தில் சேர்ந்து இருப்பர்.

    பொதுப்பிரிவில் (அதிக மதிப்பெண் பெற்று ) தனியார் கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுத்த அரசு பள்ளி மாணவருக்கு கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ஏற்குமா?

    தெரிந்தவர் பதில் தரலாமே...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி