தீபாவளி : புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை: நவ.8-ல் பள்ளிகள் திறப்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 29, 2021

தீபாவளி : புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை: நவ.8-ல் பள்ளிகள் திறப்பு

 

தீபாவளி பண்டிகை வரும் வாரம் வரவுள்ள நிலையில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் அடுத்த வாரம் முழுக்க விடுமுறையைப் பள்ளிகள் அறிவித்துள்ளன. வரும் 8-ம் தேதி முதல் பள்ளிகள் முழுமையாக இயங்க உள்ளன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4-ம் தேதி வருகிறது. இந்துக்களின் பண்டிகைகளில் தீபாவளி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். அதனால் அடுத்த வாரம் முழுக்கப் பல பள்ளிகள் விடுமுறையை அறிவித்துள்ளன.


அக்டோபர் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை. அதேபோல் நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி  விடுதலை நாள் என்பதால் அன்றும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளிகள் விடுமுறை தொடர்பாக இணை இயக்குநர் சிவகாமி பள்ளிகளுக்கு அனுப்பிய உத்தரவில், "நவம்பர் 2-ம் தேதி கல்லறை தினம்  வருவதால் அன்றும், 3, 4-ம் தேதிகள் தீபாவளியையொட்டியும் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் பல தனியார் பள்ளிகள் தீபாவளியையொட்டி அடுத்த வாரம் முழுக்க விடுமுறையை அறிவித்துள்ளன. இதுபற்றி விசாரித்தபோது, "தீபாவளிக்கு அடுத்த நாள் வழக்கமாக விடுமுறை விடப்படும். அதனால், வரும் 8-ம் தேதி முதல் கல்வித்துறை உத்தரவுப்படி பள்ளிகள் அரை நாள் செயல்படத் தொடங்கும்" என்று தெரிவித்தனர்.

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் தீபாவளிக்குப் பிறகு வெள்ளி, சனிக்கிழமைகளில் வகுப்புகள் இருக்கும். இதர வகுப்புகளுக்கு முழு விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி