Flash News : கனமழை - நாளை ( 30.10.2021 ) பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2021

Flash News : கனமழை - நாளை ( 30.10.2021 ) பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


ஏற்கனவே தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்திருந்தனர்.


அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி