பிஎப்.புக்கு 8.5% வட்டி வழங்க ஒப்புதல். - kalviseithi

Oct 30, 2021

பிஎப்.புக்கு 8.5% வட்டி வழங்க ஒப்புதல்.

 

பிஎப் சந்தாதாரர்களுக்கு, அவர்களின் கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. 2018-19 நிதியாண்டில் பிஎப் வட்டி 8.65 சதவீதமாக இருந்தது. ஆனால், ஒன்றிய பாஜ அரசு, இந்த வட்டியை 2019-20 நிதியாண்டில் 8.5 சதவீதமாக குறைத்து விட்டது.  இது தொழிலாளர்களிடையே மிக கடுமையான அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கும், மாற்றமின்றி இதே வட்டியை வழங்க கடந்த மார்ச் மாதம்  முடிவு செய்யப்பட்டது.


  ஆனால், இது தொழிலாளர்களின் கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், நடப்பு நிதியாண்டில் ஊழியர்களின் பிஎப் கணக்கில் உள்ள இருப்பு தொகைக்கு 8.5 சதவீத வட்டி கணக்கிட்டு வழங்க ஒன்றிய அரசு  ஒப்புதல் அளித்துள்ளது. இது 5 கோடிக்கும் மேற்பட்ட பிஎப் சந்தாதாரர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என, நிதியமைச்சக அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி