பள்ளி கல்வித்துறையில் பூஜ்ஜியக் கலந்தாய்வு என்றால் என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2021

பள்ளி கல்வித்துறையில் பூஜ்ஜியக் கலந்தாய்வு என்றால் என்ன?


இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மட்டும் புதியதாக பூஜ்ஜியக் கலந்தாய்வு என்ற நிகழ்வு அரங்கேர உள்ளது. அப்படியானால் பூஜ்ஜியக் கலந்தாய்வு எப்படி நடக்கும் என்பது பற்றி ஒரு பார்வை.

முதலில் அனைத்து பணியிடங்களும் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும். பின்னர் EMIS மூலமாக பணியிட வாரியாக பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்படும். இணைய வழி மூலம் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு நாளன்று கலந்தாய்விற்கு முன்னர் பணிமூப்பு பட்டியல் வெளியிடப்படும்.   பணிமூப்பு பட்டியலின் படி கலந்தாய்விற்கு நபர்கள் அழைக்கப்படுவார்கள். அப்பொழுது அவர்களுக்கு காலிப்பணியிடங்கள் திரையில் தோன்றும். அதில்  தற்பொழுது அவர்கள் பணிபுரியும் இடம் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலாத வகையில் (disable) மறைக்கப்பட்டிருக்கும். அவர்கள் விரும்பும் இடத்தை தேர்ந்தெடுக்கலாம். கலந்தாய்விற்கு முன்னர் கலந்தாய்வு விதிகள் வெளியிடப்படும். அதில் ஊனமுற்றோர், முன்னாள் இராணுவத்தினர், இராணுவத்தில் பணிபுரிபுவர்களின் மனைவி, புற்றுநோய்,இதயநோய் போன்ற மிகவும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்படலாம். ஒவ்வொரு பணியிடங்களும் மாறுதல் கலந்தாய்வு நிரைவடைந்தவுடன் மீதமுள்ள  காலிப்பணியிடங்களுக்கு கீழ் நிலைப் பதவியிலிருந்து பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். 


உதாரணமாக மாவட்டக் கல்வி அலுவலர் கலந்தாய்வு முடிந்தவுடன் அந்த பணியிடத்திற்கான பதவி உயர்வானது மேனிலை / உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் வழங்கப்படும். இது முடிந்தவுடன் தலைமைஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அனைத்து தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலிப் பணியிடமாக அறிவிக்கப்பட்டு விதிகளின் படி பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் படி கலந்தாய்விற்கு அழைக்கபடுவர்.  பின்னர் முதுகலை ஆசிரியர் பதவியிலிருந்து தலைமைஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். இதே போல் அனைத்து பணியிடங்களுக்கும் பூஜ்ஜிய  கலந்தாய்வு நடைபெறும்.

8 comments:

  1. இந்த விபரம் யார் சொன்னது. ஏன் இவ்வாறான தகவல்களை பரப்புகிறீர்கள்.

    ReplyDelete
  2. பூச்சிய கலந்தாய்வில் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுமா?

    ReplyDelete
  3. வணக்கம், PGTRB தேர்வுக்கு நான் அப்ளை பண்ணும் போது தவறுதலாக convocation க்கு பதிலாக provisional certificate apload செய்துவிட்டேன், நான் மறுபடியும் அப்ளை பண்ணலாமா? வேண்டாமா? Please help...

    ReplyDelete
    Replies
    1. Nothing to worry sir...if you get the chance for certificate verification you can submit there property ...All the best

      Delete
  4. ந‌ல்ல‌ ந‌டைமுறை...ஒரு சில‌ரைத் த‌விர‌ ம‌ற்ற‌ அனைவ‌ருக்கும் ப‌ல‌ன‌ளிக்கும்...ப‌ள்ளிக் க‌ல்வித் துறையில் உள்ள‌ ப‌ல‌ பிர‌ச்சினைக‌ள் க‌ளைய‌ப்ப‌டும்..என‌வே அர‌சு உட‌னே அனைத்து ப‌ணியிட‌ங்க‌ளுக்கும் பூஜ்ய‌ க‌ல‌ந்தாய்வு உட‌னே ந‌ட‌த்த‌ வேண்டும்..

    ReplyDelete
  5. ஆசிரியர்கள் பூஜ்ஜிய கலந்தாய்வால் பாதிக்கப்படுவர்.

    ReplyDelete
  6. பணம் கொடுத்து மாறுதல் பெற்றவர்கள்

    ReplyDelete
  7. எதுவாக இருந்தாலும்...முறையான அறிவிப்பு வரும்வரை...யூகங்களுக்கும் அனுமானங்களுக்கும் பயந்து குழம்ப வேண்டாம்...குழப்ப வேண்டாம்...எதுவாயினும் எதிர் கொள்வோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி