தமிழகத்தில் அரசு பணி தேடுவோர் கவனத்திற்கு – பால்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2021

தமிழகத்தில் அரசு பணி தேடுவோர் கவனத்திற்கு – பால்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்!

 


தமிழகத்தில் பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு பணம் தந்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவுறுத்தியுள்ளார்.


அரசு வேலை:


தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வருடம் முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏராளமானோர் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். அனைவருக்கும் அரசு பணியில் சேர வேண்டும் என்பது பெரும் கனவாக இருந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அரசு வேலை பெற போட்டித்தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சிலர் சிபாரிசுகள் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்கள் பணம் கையாடல் செய்கின்றனர்.


இதனை நம்பி ஏராளமானோர் அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை லட்சக்கணக்கில் கொடுத்து ஏமாறுகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் மீண்டும் வேலை கிடைப்பது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில பண மோசடி செய்யும் கும்பல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான புகார்களும் காவல்துறைக்கு வந்த வண்ணம் உள்ளது.


சமீபத்தில் அரசு பள்ளிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்கும் நபர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தினார். அவரை தொடர்ந்து தற்போது பால்வளத்துறை அமைச்சர் நாசர் பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. Tnpsc group 4மற்றும் vao BC வகுப்பு சேர்ந்த ஒரு காது கேளாமை இருப்பவருக்கு வயது வரம்பு எவ்வளவு இருக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி