பணி மாறுதல் கலந்தாய்வில் புதிய நடைமுறையினை கைவிட ஆசிரியர் கூட்டணி கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2021

பணி மாறுதல் கலந்தாய்வில் புதிய நடைமுறையினை கைவிட ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!


பணி மாறுதல் கலந்தாய்வில் புதிய நடைமுறையினை கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

கைவிட கோரிக்கை :

தமிழகத்தில் சிறந்த நிர்வாகத்தினை வழங்கிவரும் தங்களுக்கு எங்களது நன்றியினையும் , வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மதிப்புமிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 12.10.2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான இடமாறுதலை வெளிப்படைத் தன்மையோடு கலந்தாய்வு முறையில் நடத்த முன்வந்துள்ள ஆணையரின் நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வரவேற்கிறோம். அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களையும் காலிப்பணியிடங்களாக கருதப்பட்டு பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய நடைமுறை , கலந்தாய்வு என்ற பெயரில் செயல்படுத்தப்படும் கட்டாயப் பணி மாறுதல் நிகழ்வாகவே கருதப்படுகிறது. இது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரனமாக அமைந்துவிடும்.


இந்த நடவடிக்கை , கலந்தாய்வு என்ற இனிப்பை காட்டி , கையில் இருப்பதை பறிக்கும் நடவடிக்கையாக கருதப்பட்டுவிடும். எனவே , அனைத்து பணியிடமும் , காலிப்பணியிடம் என்ற புதிய நடைமுறையை கைவிட்டு தற்போது இருக்கும் காலிப் பணியிடங்களின் அடிப்படையிலேயே கலந்தாய்வு பணி மாறுதல் நடத்த வேண்டும் என மிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

11 comments:

  1. https://www.kalviseithi.net/2021/10/blog-post_76.html?showComment=1633832379082&m=1#c8254295941710204586

    ஒரு சங்கம் வேணாம்னு சொல்லுது.
    ஒரு சங்கம் வேணும்னு சொல்லுது.
    ஒரே ஸ்கூல்ல 20 30 வருஷம் வேலை பாத்தா என்ன அர்த்தம்.. உலகம் பெருசு...

    ReplyDelete
  2. 60வது வரை ஒரே இடத்தில டெண்ட் அடிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

    ReplyDelete
  3. இது ச‌ரியான‌ ந‌டைமுறை தான்...ஆசிரிய‌ர் க‌ல‌ந்தாய்விலும் இத்த‌கைய‌ ந‌டைமுறையைப் பின்ப‌ற்ற‌ வேண்டும்..அப்பொழுது தான் க‌ல்வித்துறையில் இருக்கும் த‌வ‌றுக‌ள் க‌ளைய‌ப்ப‌டும்...ஒரே ப‌ணியிட‌த்தில் ப‌ல்லாண்டுக‌ள் ப‌ணிபுரிவ‌தால் ஏற்ப‌டும் ப‌ல‌ பிர‌ச்சினைக‌ள் தீர்க்க‌ப்ப‌டும்..

    ReplyDelete
    Replies
    1. Eppa enna nadukuthune theriyama comment pannatha.muthalil ennavendru padithu therinthu kolavum

      Delete
  4. Ippadiye confuse panni nadakka vendiya counselling um nadakka vidama panniduvanga

    ReplyDelete
  5. சரியான நடைமுறை

    ReplyDelete
  6. ஆசிரியர்கள் பணிமாறுதல் கட்டாயம் தேவை. 20/30 ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணி என்பது தவறுதான். மேலும், அரசு நடைமுறைப்படுத்தினால்
    பாராட்டலாம்..!!!.சட்டம் தன் கடமையை நிறைவேற்றட்டும்.

    ReplyDelete
    Replies
    1. சல்ல சொல்ல பதிவுகள்........

      Delete
    2. அப்போதும் அவர் சீனியராக இருப்பார்.அதே இடத்தை தான் எடுப்பார்.

      Delete
  7. சங்கம் எதுக்குயெடுத்தாலூம் எதிர்ப்பு தெரிவிக்கும்

    ReplyDelete
    Replies
    1. உனக்கு என்ன தெரியும் னு நீ இங்க வந்து comment panra

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி