ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த வாட்ஸ் அப் குழுக்கள் ஆரம்பிக்க ஆதி திராவிட நல ஆணையர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2021

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த வாட்ஸ் அப் குழுக்கள் ஆரம்பிக்க ஆதி திராவிட நல ஆணையர் உத்தரவு!

 

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 833 தொடக்கப்பள்ளிகளும் , 99 நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகிறது. இதில் 2020-2021 - ம் கல்வி ஆண்டில் தொடக்கப்பள்ளியில் 33,736 மாணவ / மாணவியர்களும் , நடுநிலைப்பள்ளியில் 8,147 மாணவ / மாணவியர்களும் கல்வி பயின்றுள்ளனர். மேலும் , தொடர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.


இத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வித்தரம் மேம்படவும் , இம்மாணவர்கள் தரமான கல்வியின்மூலம் உயர்கல்வியினை பயிலவும் , இதனால் இத்துறையில் கல்வி பயிலும் மாணவ / மாணவியர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் , தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கல்வி பயின்று வரும் மாணவ / மாணவிகளின் கற்றல் திறனில் மேம்பாடு அடைய இத்துறையில் பல்வேறு முன்னேற்ற நடைவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக , இணைய தளத்தில் “ BumbieB " அறக்கட்டளை மூலமாக தமிழ்வழிக் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக இலவசமான , விளம்பரம் இல்லாத கற்றலை எளிமையாக்கும் " கல்வி 40 ” என்ற செயலி வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள , இச்செயலியை பயன்படுத்தலாம் என்று கருதப்படுகிறது . 


இச்செயலியில் 3 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களையும் ஒளி ஒலி வடிவில் குறும்பட்ங்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளி பாடங்கள் மட்டும் அல்லாமல் , போட்டிகள் , பயிற்சி தேர்வுகள் , போட்டி தேர்வுகள் , விடுகதைகள் மற்றும் கதைகள் போன்றவைகளும் உள்ளன. இச்செயலியில் படங்கள் மூலமாகவும் , ஒளி ஒலி மூலமாகவும் , ஒவ்வொரு பாடங்களையும் விரிவாகவும் , விளக்கமாகவும் போதிப்பதால் , மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் உள்ளது.


மேலும் , ஓராசிரியர் மட்டும் பணிபுரியும் பள்ளிகளில் இதுபோன்ற செயலிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இச்செயலியை கைபேசியில் உள்ள Play store app- ல் “ கல்வி 40 ” என்று தட்டச்சு செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இச்செயலியில் செயல்படுத்தப்படும் கற்பித்தல் சார்ந்த பயிற்சிகள் மாணவர்களை சென்றடையும் பொருட்டு ஒவ்வொரு பள்ளியிலும் " கல்வி 40 ” செயலி பதிவிறக்கம் செய்தும் , அதன் வழியே மாணவ / மாணவிகளுக்கு இணைய வழிக்கல்வி பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு , மாவட்டங்களில் இயங்கிவரும் 833 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 99 நடுநிலைப்பள்ளிகளையும் தனித்தனியாக ஒருங்கிணைத்து பயிற்சிகள் வழங்கிடவும் , அவை மாணவ / மாணவிகளுக்கு சென்றடையும் வகையில் மாநில அளவில் கீழ்க்கண்டுள்ளவாறு வரிசை எண் .2 முதல் 3 வரையுள்ள அலுவலர்களை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறது. 


வரிசை எண் .4 - ல் உள்ள ஒருங்கிணைப்பாளர்களை அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் நியமனம் செய்யுமாறும் , கீழ்க்கண்டுள்ளவாறு “ Whatsapp ' குழு ஆரம்பித்து அதன் விவரத்தை 20.10.2021 - க்குள் ஆணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


" Whatsapp ” குழு விவரம் :





3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி