ஆசிரியர்களுக்கான CCRT பயிற்சி குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! - kalviseithi

Oct 26, 2021

ஆசிரியர்களுக்கான CCRT பயிற்சி குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


 புதுடெல்லி Centre for Cultural Resources and Training என்ற நிறுவனத்தால் , " Role of Puppetry in Education ” என்ற தலைப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி / நடுநிலைப் பள்ளி / உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 09.11.2021 முதல் 19.11.2021 வரை ஒன்பது வேலை நாட்கள் பயிற்சி நடத்துதல் மற்றும் 16.11.2021 முதல் 26.11.2021 வரை ஒன்பது வேலை நாட்கள் பயிற்சி இணைய வழி பயிற்சி பட்டறை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் , இக்கடிதத்தில் தொடக்கப் பள்ளி / நடுநிலை / உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் மாவட்டத்திற்கு 01 ஆசிரியரையும் இரண்டவதாக நடக்க உள்ள பயிற்சிக்கு மாவட்டத்திற்கு 01 01 ஆசிரியரையும் இணையவழி பயிற்சிக்கு பரிந்துரை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி சார்பான விவரங்கள் மற்றும் ஆசிரியர்களை பயிற்சிக்கு பரிந்துரை செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் இக்கடிதத்துடன் இணைப்பாக பெறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


எனவே , வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , இணையவழி பயிற்சியில் கலந்துகொள்ள அரசு / அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் ஒரு ஆசிரியர் வீதம் தனித்தனி படிவத்தில் மொத்தம் தகுதியான 2 ஆசிரியர்களை பரிந்துரை செய்து இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் மென்நகலாக ( Excel file , details in english ) இவ்வலுவலகத்தின் வி 2 பிரிவின் v2sec.tndse@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 28.10.2021 - ற்குள் அனுப்புமாறும் , ஆசிரியர்களை 17 ... பயிற்சியில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறும் தெரிவிக்கலாகிறது . மேலும் முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட கடிதத்தை விரைவு அஞ்சலில் அனுப்புமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி