மாத EMI செலுத்துவோர் கவனத்திற்கு...ஆட்டோ டெபிட்டில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2021

மாத EMI செலுத்துவோர் கவனத்திற்கு...ஆட்டோ டெபிட்டில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

 

ஒவ்வொரு மாதமும் டிஷ் டிவி, மொபைல், மின்சாரம், காஸ், குடிநீர் வரி உள்ளிட்ட மாதாந்திர கட்டணங்களை செலுத்த தங்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் ஆட்டோ டெபிட் வசதியை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால், சில நேரங்களில் அவசர தேவைக்கு என ஒதுக்கி இருந்த பணத்தை கூட எடுக்க முடியாமல், ஆட்டோ டெபிட் மூலம் பணம் எடுக்கப்பட்டு விடும்.  இந்த சூழலில், வங்கிகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு நிறுவனங்களுக்கு ஆட்டோ டெபிட் முறையில் இனி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணம் எடுக்க கூடாது என்ற புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது.


அதன்படி, பணத்தை எடுப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, வாடிக்கையாளர்களுக்கு செல்போன் அல்லது இ-மெயில் மூலமாக அறிவிப்பு அனுப்ப வேண்டும். அதற்கு வாடிக்கையாளர் அனுமதி வழங்கினால் மட்டுமே, அந்த பரிவர்த்தனையை வங்கிகள் செயல்படுத்த முடியும். இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு வங்கிகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு நிறுவனங்கள் அவகாசம் கோரியிருந்தன. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம், வாடிக்கையாளரின் அனுமதியின்றி வங்கிகள் இனிமேல் ஆட்டோ டெபிட் செய்ய முடியாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி