இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க ( RP ) ஆசிரியர்கள் EMIS இணையத்தில் பதிவு செய்யலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2021

இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க ( RP ) ஆசிரியர்கள் EMIS இணையத்தில் பதிவு செய்யலாம்!

 

கொரோனா பெருந்தோற்று பரவல் காரணமாக 1 முதல் 8 - ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்பையும் சரிசெய்யும் விதமாக தன்னார்வலர்களை கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள " இல்லம் தேடிக் கல்வி " என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது . இத்திட்டத்திற்காக பணியாற்றவுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் அவர்களுடைய staff login- ல் உள்ள ITK RP's option- ஐ பயன்படுத்தி , தங்கள் விருப்பம் மற்றும் விருப்பமின்மைக்கான விவரத்தினை தவறாமல் 28.10.2021 - க்குள் பதிவிட வேண்டும்.


இத்தகவலை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய விவரங்களை பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



8 comments:

  1. இந்த திட்டத்தை மாலை நேரத்தில் அரசு பள்ளி ஆசிரியகளை பயன்படுத்தினால் அரசு பணம் விரயத்தை மிச்சப்படுத்தலாம்.அரசு ஆசிரியர்கள் இவ்வளவு நாள் ஓய்வாக இருந்தவர்களுக்கும் வேளை கொடுத்தது போல் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. because of the Pandamic holiday they have a heavy work.

      Delete
  2. இவர்களுக்கு கொடுக்கிற பயிற்சிக்கு பதிலாக டெட் முடித்தவர்களை போட்டிருக்கலாம்.Mad plan.

    ReplyDelete
  3. திட்டமிடாத செயல் தோல்வியில் முடியும்
    அரசு பள்ளிகளில் அடிப்படை ஆசியற்களை நியமிக்கதவரை அனைத்தும் தோல்வியே

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் திட்டமிட்டபடியே நடக்கிறது. நமக்க்கு இப்போதுதான் அறிவிக்கிறார்கள்.

      Delete
  4. அதுவே உண்மை

    ReplyDelete
  5. Tetku postings poduvangala friends intha year

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி