கள்ளர் சீரமைப்பு பள்ளி கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் TRB வெளியீடு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 8, 2021

கள்ளர் சீரமைப்பு பள்ளி கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் TRB வெளியீடு

 

தமிழகத்தில் இயங்கி வரும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 2018-2019ம் ஆண்டில் ஏற்பட்ட கணினி ஆசிரியர் கிரேடு1 ( முதுநிலை) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2019 நவம்பரில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. கூடுதலாக 10 இடங்களும் இணைக்கப்பட்டது. இதையடுத்து, கணினி வழி போட்டித் தேர்வுகள் 2019 ஜூன் 23, 27 தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் 2019 நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்டது. 


பின்னர் 2020 ஜனவரி மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களின் தற்காலிக தெரிவுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல்கள், சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை உயர்நீதி மன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களின் பேரில் அளிக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன. தகுதியுள்ள நபர்களுக்கான பணி நியமன ஆணைகள் அந்தந்த துறைகள் மூலம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2019 - PROVISIONAL SELECTION LIST - KALLAR RECLAMATION SCHOOLS

2 comments:

  1. இதற்கு முன் எழுதிய சிறப்பாசிரியர்கள் தேர்வு,,,,,2017 ல் எழுதிய தேர்வு,,,,,இன்று வரை தமிழ் இட ஒதுக்கீடு பணி நியமனம் செய்யவில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி