இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலர்கள் பங்குபெறுவது எப்படி? - Volunteer Registration Form - kalviseithi

Oct 19, 2021

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலர்கள் பங்குபெறுவது எப்படி? - Volunteer Registration Form

 

1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில்  கற்றல் இடைவெளியினை குறைக்கும் நோக்கில் இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்திட்டத்தை தன்னார்வலர்கள் மூலமாக செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறையால் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. http://illamthedikalvi.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்களை பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்து தன்னார்வலர்களாக இணைந்துகொள்ளலாம்.

இல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்ய ஏதுவாக, படிவம் இவ்விணைய தளத்தில் வழங்கப்பட்டு உள்ளது.


தன்னார்வலர்கள்..


வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.

கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்

தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)

யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்

குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்


தன்னார்வலர்களுக்கான பதிவேற்று படிவத்தை தொடங்கு / Click here to start the Volunteer Registration Form


5 comments:

 1. 1.ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் தகுதி வாய்ந்த சுமார் 80000 ஆசிரியர்களை ஏன் இப்பணியில் ஈடுபடுத்த அரசு முன்வரவில்லை?

  2.அடிப்படை ஆசிரியர் அறிவு இல்லாமல் +2 மாணவரை கற்றல் பணியில் ஈடுபட்டால் எப்படி மாணவர்கள் கற்றல் அறிவை பெறமுடியும்?
  3.இப்பணிக்கு குறைந்த பட்சம் ஊதியம் உண்டா? இல்லை அதையும் தன்னார்வளகளே இலவசமாக செய்ய முன்வர வேண்டுமா?
  ReplyDelete
  Replies
  1. Super .. இதை அமைச்சர் padipaara .. Chumma scene.. Avlo than

   Delete
 2. நம்ம அமைச்சர் புடுங்கறது எல்லாமே தேவை இல்லாத ஆணி தான்...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி