இல்லம் தேடிக் கல்வி கையேடு! - kalviseithi

Oct 19, 2021

இல்லம் தேடிக் கல்வி கையேடு!

 

இல்லம் தேடிக் கல்வி : 

கொரோனா பெருந்தொற்றுப் பொது முடக்க காலங்களில் , அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்புகளைக் குறைத்திடும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " என்கிற திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது . " இல்லம் தேடிக் கல்வி " திட்டமானது , மாநில அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்பின்கீழ் , ரூ .200 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்.


திட்டத்தின் தொலைநோக்கு : 


கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் , அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளைச் சரிசெய்தல்.


 திட்டக்குறிக்கோள் : 

அ . பள்ளி நேரங்களைத் தவிர , பள்ளி வளாகங்களுக்கு வெளியே , மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் அடிப்படையில் , சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல். 

ஆ. மாணவர்கள் , பள்ளிச் சூழலின்கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை " இல்லம் தேடிக் கல்வி " திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்.

இ . இத்திட்டம் 6 மாதகாலத்திற்கு , தினசரி குறைந்தபட்சம் 1 முதல் 1 % மணி நேரம் ( மாலை 5 மணி முதல் 7 மணி வரை ) மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்கி அவர்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பங்கேற்கச் செய்தல்.


திட்டச் செயல்பாட்டு வழிமுறைகள் :

 தமிழகத்தில் 92,297 குடியிருப்புகளில் உள்ள 34,05,856 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர் 8 முதல் 1 கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களிடையே கடுமையான கற்றல் இழப்பை ஏற்படுத்தியது இந்த .கிராமப்புற குடியிருப்பு அடிப்படையிலான வெளியீட்டு திட்டமானது , குழந்தைகளிடையே கற்றல் இழப்புகளை குறைக்க உதவும்.


Illam thedi kalvi TM.pdf - Download here...
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி