ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு: குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை - kalviseithi

Nov 28, 2021

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு: குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை

 

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.50 இலட்சத்திலிருந்து ரூ.8.00 இலட்சமாக உயர்த்தியும், மாணாக்கர்களின் எண்ணிக்கை 1200-லிருந்து 1600 ஆக உயர்த்தியும், ஒரு மாணவருக்கான ஊக்கத்தொகையினை ரூ.50,000-லிருந்து ரூ.1.00 இலட்சமாக உயர்த்தியும் அரசாணை (நிலை) எண்.96, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந-3)துறை, நாள் 25.11.2021-இல் ஆணை வெளியிடப்பட்டது.


இத்திட்டதிற்க்கென, 2021-2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட நிதியொதுக்கீட்டில் ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 2020-2021 ஆம் ஆண்டு முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகைத் திட்டத்தில் 1124 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

 1. Polytechnic trb exam எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு..ஒரு நிமிடம் இதை முழுவதும் படிக்கவும்.. ஏற்கனவே பல நெருக்கடிகளை கடந்து வந்து விட்டோம்.. தற்போது கனமழை பெரும்பாலான மாவட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. ஆண்டு முழுவதும் போட்டி தேர்வுக்கு படித்து இருந்தாலும், தேர்வு நடைபெறும் இறுதி சூழல் தான் தேர்ச்சியை நிர்ணயிக்கும்..

  கல்லூரி செமஸ்டர் தேர்வு ஜனவரி 20 க்கு பிறகு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..

  ஐனவரி முதல் வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற்றால் தான் அனைவருக்கும் நன்று..

  இது சாத்தியமா ? என்று கேட்டால்.. 100% சாத்தியம்.. தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.. நமது வேண்டுகோள் அதை மாற்றி புரட்சி செய்தது.. அது போல மீண்டும் ஒரு முயற்சி.. கடிதம்..
  ஆம் .. நண்பர்களே. நாம் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்புவோம்.... 5நிமிடம் போதும் .. நம் வாழ்க்கையே மாற்றும்..

  அல்லது

  தொலைபேசியில் தெரிவிக்கலாம்.. இமெயில் கூட அனுப்பலாம்..

  ஆனால் ஒரு முறையாவது முயற்சி செய்யுங்கள்..

  தேர்வுக்கு படிப்பவர்கள் தாராளமாக படியுங்கள்.. 40 நாட்கள் கிடைத்தால் உங்கள் மதிப்பெண் எவ்வளவு உயரும் என்பதை ஒரு நொடி நினைத்து பாருங்கள்.. நன்றி வணக்கம்... 🙏
  Teachers recruitment board,
  College Rd, Near Sankara Nethralaya(Main), Subba Road Avenue, Nungambakkam, Chennai Tamil Nadu 600006

  04428272455
  9444630068, 9444630028

  Email: trb.tn@nic.in

  ReplyDelete
  Replies
  1. please postpone the exam date because of raining situation.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி